Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමඟ).தனித்துவ அரசியலில் இருந்து ஒருமித்த இலங்கையை நோக்கி... தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் உறுப்பினர்களின் வகிபாகம்.


සිංහල පරිවර්තනය සමඟ).தனித்துவ அரசியலில் இருந்து ஒருமித்த இலங்கையை நோக்கி... தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் உறுப்பினர்களின் வகிபாகம். පුද්ගලවාදී දේශපාලනයෙන් එක්සත් ශ්‍රී ලංකාවක් දක්වා...ජාතික ජන බලවේගයේ මුස්ලිම් සාමාජිකයින්ගේ දායකත්වය.

NPP முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்திற்கு எதைச் செய்துள்ளார்கள் என்ற விமர்சனம் நியாயமானதா.? 

படித்த இளைஞர்களின் ஆதரவோடு, இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் NPP பாராளுமன்ற உறுப்பினர்களை மத உணர்ச்சிகளையும், பிரதேசப் பிளவுகளையும் பயன்படுத்திச் சுயலாபம் தேடிய பாரம்பரிய முஸ்லிம் அரசியல்வாதிளின் பின்புலமே அவர்கள் மீது உண்மைக்கு புறம்பான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

மதத்தையும் புனித குர்ஆனையும் அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்தாமல், ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டையும் சமூக நீதியையும் கட்டியெழுப்புவதே NPPயின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நோக்கமாக உள்ளது.



தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதனை செய்துள்ளார்கள்? அல்லது முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றார்களா? என்ற கேள்வியானது மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய முஸ்லிம் அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியில் உள்ள எம்.பிக்கள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கும் விமர்சனங்களாக அதிகளவில் சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (JVP)தேசிய மக்கள் சக்தி (NPP) என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ மட்டுப்படுத்தப்பட்ட கட்சி அல்ல. மாறாக அது ஒட்டுமொத்த இலங்கையர்களுக்குமான பொதுவான அரசாங்கம் என்ற கொள்கையின் கீழ் உள்ள கட்சியாகும். அதனை முழுமையாக ஏற்று கொண்டவர்களாகவே NPPயின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளது என்பதை சந்தர்ப்பவாத அரசியலுக்காக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.


இவ்வாறான ஒரு தலைப்பட்ச விமர்சனங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுர குமார திஸா நாயக்க தலைமையிலான சமகால அரசியலில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கடந்த கால மற்றும் தற்போதைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள், அவர்களின் அரசியல் பின்னணி, கொள்கைகள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளில் அவர்கள் நடந்து கொள்ளும் முறைகள் என்பன முக்கிய அவதானிப்புக்களை கொண்ட விடயமாக மாறியுள்ளது.

தற்போதைய பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் 159 தேசிய மக்கள் சக்தி சார்ந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பாரம்பரிய அரசியல் குடும்பங்களைச் சாராத, புதிய முகங்களாகும். இவர்கள் மீது கடந்த காலங்களில் எவ்வித நிதி மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் என எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

அதில், ரிஸ்வி ஸாலிஹ் - கொழும்பு மாவட்டம், முனீர் முளப்பர் - கம்பஹா மாவட்டம், ரியாஸ் பாரூக் - கண்டி மாவட்டம், முஹம்மத் பஸ்மின் - கண்டி மாவட்டம், அர்கம் இலியாஸ் - மாத்தறை மாவட்டம், எம். கே. எம். அஸ்லம் - குருநாகல் மாவட்டம், முஹம்மத் பைசால் - புத்தளம் மாவட்டம், அபூபக்கர் ஆதம்பாவா - தேசியப் பட்டியல் (அம்பாறை மாவட்டம்) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி நிதிதுவப்படுத்துகின்றனர்.

மேலும், இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவும் உள்ளார்கள். அரச வளங்களை பாதுகாத்தல், சமூக நீதி, மற்றும் நாட்டை ஒரு சோசலிச/மக்களாட்சி பாதையில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட பொதுவுடமைக் கொள்கைகளை அதிகம் வலியுறுத்துகின்றனர்.

NPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சொகுசு வாகன அனுமதிப்பத்திரங்கள் (Permits), ஓய்வூதியம் மற்றும் ஏனைய கூடுதல் சலுகைகளை நிராகரிப்பதாக பகிரங்கமாக அறிவித்து அதனை வெளிப்படையாக செயற்படுத்தி வருகின்றார்கள். மக்கள் பணத்தை வீணடிக்காத எளிமையான அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றுவது அவர்களுடைய கொள்கைத் தத்துவமாகவும் உள்ளது.

அடிமட்ட மக்கள் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட கூட்டுத் தலைமைத்துவ கட்டமைப்பின் (Collective Leadership) கீழ் கட்டுக்கோப்புடன்  செயல்படுகின்றார்கள். பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியான வருகையை பதி செய்வதுடன், சட்ட மூலங்கள் மீதான விவாதங்களில் ஒழுக்கமான முறையில் தரவுகளுடன் வாதிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

NPP-யின் அரசியலானது "இனம்/மதம் சார்ந்த தனித்துவ அரசியல்" என்ற வட்டத்துக்குள் இயங்குவது அல்ல. அவர்கள் அனைத்துச் சமூகங்களுக்கும் பொதுவான ஊழலற்ற, சமத்துவமான ஆட்சியை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட சமூகப் பிரதிநிதிகளாக மட்டுமன்றி, முழு நாட்டிற்குமான பொறுப்புகளைப் ஏற்றுக்கொண்டு செயற்படுபவர்களாகவே இருக்கின்றார்கள்.

வீண் கூச்சல்கள் மற்றும் அழங்கார மேடைப் பேச்சுகளைத் தவிர்த்து, அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு கொள்கை ரீதியாகவும் சட்டரீதியாகவும் தீர்வுகளைக் காணும் விடயத்தில் முஸ்லிம் NPP எம்.பிக்கள் முன்னிற்கின்றனர். "கடந்த காலத்தில் தனித்துவக் குரல் கொடுத்ததாகக் கூறிய தலைவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன செய்தார்கள்?" என்ற எதிர்க்கேள்வியும் இந்த தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அதிகமாகவே இருக்கின்றது.

கடந்த காலத்தில் இன,மத உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தி வாக்கு வங்கிகளைத் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில்  தக்கவைத்துக் கொண்டார்கள். ஊர் சார்ந்த உணர்வுகளையும், பிரதேசப் பிளவுகளையும் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபத்தை அடைந்து கொள்ளும் வியாபார அரசியலையே முன்னெடுத்தார்கள். ஏனைய சமூகங்களுடனான நல் உறவை மேம்படுத்துவதை விட, பிரித்தாளும் தந்திரங்கள் மூலம் தங்களின் அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

1990க்கு பிற்பட்ட காலத்தில், சந்தர்ப்பவாத அரசியலை கையிலெடுத்த முஸ்லிம் தனித்துகொள்கை கொண்ட அரசியல்வாதிகள், பாரம்பரிய முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் பழைய அமைப்புகள் மக்களின் அடிப்படை தேவைகளையும், பிரச்சனைகளையும் பூர்த்தி செய்யத் தவறியபோது, அது முஸ்லிம் இளைஞர் சமூகத்தின் மத்தியில் மெதுவான அரசியல் விழிப்புணர்வை  உருவாக்க தொடங்கியது. ​

அதனால் படித்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்கள் பழைய இனவாத மற்றும் வர்க்க ரீதியிலான பிளவுகளைத் தாண்டி, வெளிப்படைத்தன்மை, ஊழல் அற்ற நிர்வாகம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை முதன்மைப்படுத்தத் தொடங்கினர். அதற்காக மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் 2015க்கு பின்னர் அவர்களுக்காக களம் அமைத்துக் கொடுக்க தொடங்கியது. 

தேசிய மக்கள் சக்தி (NPP) முன்வைத்த "ஊழலற்ற அரசியல்", "இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு அப்பாற்பட்ட ஐக்கியம்" போன்ற கோஷங்கள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன் விளைவாக, பாரம்பரிய முஸ்லிம் தலைமைகளையும், கட்சிகளையும் நிராகரித்து, NPP சின்னத்தின் கீழ் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்களும், இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் சிங்கள மற்றும் தமிழ் சமூகமும் வாக்களித்தது. அத்தோடு, தேசியப் பட்டியல் வாயிலாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது.

அந்த வகையில், தற்பொழுது பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) முஸ்லிம் உறுப்பினர்களும் 
மதத்தின் பெயரால் பிரிவினையை தூண்டாமல், அனைத்து சமூகங்களுக்கு இடையிலும் இன நல்லுறவை வளர்க்க பாடுபடுகின்றனர். முக்கியமாக, மதத்தின் பெயரால்  புனித குர்-ஆனையோ, ஹதீஸையோ அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தவோ அல்லது அரபு நாடுகளிடம் இருந்து அபிவிருத்தி என்ற பெயரில் சுயலாபம் பெற்றுக்கொள்ளவோ இல்லை.

அரச காணிகளை ஆக்கிரமிக்கவுமில்லை, அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அரச காணி ஒப்பந்தங்களை தங்களின் உறவினர்களின் பெயரில் பெற்றுக் கொள்ளவுமில்லை. கட்டட மற்றும் நெடுஞ்சாலை​களுக்கான கட்டுமான ஒப்பந்தங்கள் (Contracts) மூலம் கொமிஷன் பெறவுமில்லை, ​பினாமிகளின் பெயரில் சொத்துக்களை குவிக்கவுமில்லை.

முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைத் தேசியக் கட்சிகளிடம் அடகு வைக்காமலும், ஆட்சி மாற்றத்திற்காகக் கோடிக்கணக்கான பணத்தைப் பெறாமலும் நேர்மையாகச் செயற்படுவதோடு, ஊழலற்ற, இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட "ஒருமித்த இலங்கையை" கட்டியெழுப்பும் தூய்மையான அரசியலில் பயணிப்பவர்ககளாகும், பங்காளர்களாகவுமே NPP யை சேர்ந்த  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

மேலும், கடந்த காலத்தில் 'சமூகத்தைப் பாதுகாப்பதாக' கூறிக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை விற்று பிழைத்து சுயலாபம் தேடிய அரசியல் கலாச்சாரத்திற்கு மாற்றாக, "தேசிய ஒருமைப்பாடும் நேர்மையும் தான் சமூகத்தின் உண்மையான முன்னேற்றம்" என்பதை இவர்கள் நிரூபித்து வருகிறார்கள் என்பதே இன்று NPP யின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சிப்பவர்களுக்கு இருக்கின்ற பிரச்சனையாகும்.

பாரம்பரிய முஸ்லிம் அரசியல் என்பது கண்ணை கட்டிய "சமூக உணர்ச்சி மற்றும் அடையாள அரசியல்" என்ற அடிப்படையில் இயங்கியது. ஆனால் தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை பிரித்தாளும் சுயலாப அரசியலை புறம் தள்ளியவர்களாக, "தேசிய ஒருமைப்பாட்டுக்கான அரசியல் பாணியை கடைப்பிடிக்கின்றார்கள் என்பதே உண்மை.

அஹமட் இர்ஷாட்.
திகனரன் பத்திரிகைக்காக
21-08-2026.

தனித்துவ அரசியலில் இருந்து ஒருமித்த இலங்கையை நோக்கி... தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் உறுப்பினர்களின் வகிபாகம். පුද්ගලවාදී දේශපාලනයෙන් එක්සත් ශ්‍රී ලංකාවක් දක්වා...ජාතික ජන බලවේගයේ මුස්ලිම් සාමාජිකයින්ගේ දායකත්වය.

NPP මුස්ලිම් මන්ත්‍රීවරුන් ප්‍රජාව වෙනුවෙන් කළ දේ විවේචනය කිරීම සාධාරණද? 

උගත් තරුණයින්ගේ සහයෝගය ඇතිව, ජනවාර්ගික හා ආගම් මට්ටමින් මහජන ඡන්දයෙන් තේරී පත් වූ මුස්ලිම් NPP මන්ත්‍රීවරුන් ආගමික හැඟීම් සහ ප්‍රාදේශීය බෙදීම් ගසාකමින්, ආත්මාර්ථකාමීත්වය සොයන සාම්ප්‍රදායික මුස්ලිම් දේශපාලනඥයින්ගේ විවේචනයට ලක් වේ.

NPP හි මුස්ලිම් මන්ත්‍රීවරුන්ගේ අරමුණ වන්නේ පුද්ගලික දේශපාලන වාසි සඳහා ආගම සහ ශුද්ධ වූ කුර්ආනය භාවිතා කරනවාට වඩා දූෂණයෙන් තොර පාලනයක් තුළින් ජාතික සමගිය සහ සමාජ සාධාරණත්වය ගොඩනැගීමයි.
+++++++++++++++++
ජාතික ජනබල ආණ්ඩුව නියෝජනය කරන මුස්ලිම් මන්ත්‍රීවරුන් මුස්ලිම් ප්‍රජාව වෙනුවෙන් මොනවද කරලා තියෙන්නේ? එසේත් නැතිනම් මුස් ලිම් ප් රජාව වෙනුවෙන් හඬ නඟනවාද? සාම්ප්‍රදායික මුස්ලිම් දේශපාලනඥයන්, විපක්ෂ මන්ත්‍රීවරුන් සහ සමහර මුස්ලිම් සංවිධාන පිළිබඳ විවේචන ජනතාව විසින් ප්‍රතික්ෂේප කර ඇති හෙයින් මෙම ප්‍රශ්නය සමාජ මාධ්‍ය තුළ වැඩි වැඩියෙන් දක්නට ලැබේ.

ජනතා විමුක්ති පෙරමුණ (ජවිපෙ) ජාතික ජන බලය (NPP) යනු කිසියම් ජාතියකට හෝ ආගමකට සීමා වූ පක්ෂයක් නොවේ. ඒ වෙනුවට එය සියලු ශ්‍රී ලාංකිකයන් සඳහා පොදු ආණ්ඩු මූලධර්මය යටතේ පවතින පක්ෂයකි. අවස්ථාවාදී දේශපාලනය විවේචනය කරන අය මුලින්ම දැනගත යුත්තේ එන්පීපීයේ මුස්ලිම් මන්ත්‍රීවරුන්ගේ ප්‍රතිපත්තිගරුක දේශපාලන ක්‍රියාකාරකම් සම්පූර්ණයෙන්ම පිළිගත් අය බවයි.

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ සමකාලීන දේශපාලනයේ දේශීය හා ජාත්‍යන්තර වශයෙන් එක් පිටුවක විවේචන මධ්‍යයේ ජාතික ජන බලවේගයේ (NPP) මන්ත්‍රීවරුන් සහ හිටපු සහ වත්මන් විපක්ෂයේ මන්ත්‍රීවරුන් අතර ඇති ප්‍රධාන වෙනස්කම්, ඔවුන්ගේ දේශපාලන පසුබිම, ප්‍රතිපත්ති සහ පාර්ලිමේන්තු කටයුතුවලදී ඔවුන් හැසිරෙන ආකාරය ප්‍රධාන වශයෙන් නිරීක්ෂණය කළ යුතු කරුණක් වී තිබේ.

වත්මන් පාර්ලිමේන්තුවට සම-මුදල් සපයන ජාතික ජනබල ආණ්ඩුවේ මන්ත්‍රීවරුන් 159 දෙනාගෙන් බහුතරයක් සම්ප්‍රදායික දේශපාලන පවුල්වලින් ස්වාධීන වූ නව මුහුණු ය. පසුගිය කාලය තුළ ඔවුන්ට එරෙහිව කිසිදු මූල්‍ය වංචාවක් හෝ දූෂණ චෝදනාවක් සිදු වූ බවට සාක්ෂි ලැබී නැත.

ඒ අතර රිස්වි සාලිහ් - කොළඹ දිස්ත්‍රික්කය, මුනීර් මුලපර් - ගම්පහ දිස්ත්‍රික්කය, රියාස් බාරුක් - මහනුවර දිස්ත්‍රික්කය, මුහම්මද් බාස්මින් - මහනුවර දිස්ත්‍රික්කය, ආර්කාම් ඉලියාස් - මාතර දිස්ත්‍රික්කය, එම්.කේ. එම්. අස්ලාම් - කුරුණෑගල දිස්ත්‍රික්කය, මුහම්මද් ෆයිසාල් - පුත්තලම දිස්ත්‍රික්කය, අබුබකර් අඩම්බාව - ජාතික ලැයිස්තුවේ මුස්ලිම් මන්ත්‍රීවරුන් (අම්පාර දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරු) සම- පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරු වෙති.

එසේම, ඔවුන් වාමාංශික සහ ප්‍රගතිශීලී ය. ඔවුන් රාජ්‍ය සම්පත් සංරක්ෂණය, සමාජ සාධාරණත්වය සහ රට සමාජවාදී/ප්‍රජාතන්ත්‍රවාදී මාවතකට ගෙනයාම ඉලක්ක කරගත් වාර්ගික මූලධර්ම කෙරෙහි වැඩි අවධානයක් යොමු කරයි.

මන්ත්‍රීවරුන්ට ලබා දී ඇති සුඛෝපභෝගී වාහන බලපත්‍ර, විශ්‍රාම වැටුප් ඇතුළු අමතර ප්‍රතිලාභ ප්‍රතික්ෂේප කරන බව NPP විවෘතව ප්‍රකාශ කර ඇති අතර එය විවෘතව කරමින් සිටී. මිනිසුන් මුදල් නාස්ති නොකරන සරල දේශපාලන සංස්කෘතියක් අනුගමනය කිරීමද ඔවුන්ගේ දේශපාලන දර්ශනයයි.

ඔවුන් බිම් මට්ටමේ කණ්ඩායම් සහ වෘත්තීය සමිති සමඟ සමීප සම්බන්ධතා ඇති සාමූහික නායකත්වයේ රාමුවක් යටතේ ක්‍රියාත්මක වේ. ඔවුන් නිතිපතා පාර්ලිමේන්තු සැසිවාරවලට පැමිණීම වාර්තා කරන අතර ව්‍යවස්ථාදායක මූලාශ්‍ර පිළිබඳ වාද විවාදවලදී විනයානුකූලව දත්ත සමඟ තර්ක කිරීමේ පුරුද්දක් ඇත.

එන්පීපීයේ දේශපාලනය "වාර්ගික/ආගමික බාහිර දේශපාලන" කවය තුළ ක්‍රියාත්මක වීම නොවේ. සියලු ප්‍රජාවන්ට පොදු වූ දූෂණයෙන් තොර සාධාරණ පාලනයක් ලබාදීම ඔවුන්ගේ අරමුණයි. මුස්ලිම් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් යනු තනි පුද්ගල ප්‍රජා නියෝජිතයන් පමණක් නොව, සමස්ත රට වෙනුවෙන්ම වගකීම් භාර ගන්නා පුද්ගලයන්ය.

මුස්ලිම් එන්පීපී මන්ත්‍රීවරු පුහු ඝෝෂා කිරීම් සහ ප්‍රතාපවත් කතා වෙනුවට ආන්ඩුව තුලින්ම ප්‍රතිපත්තිමය සහ නෛතික විසඳුම් සෙවීමෙහිලා පෙරමුණ ගෙන සිටිති. "අතීතයේ තමන්ට අනන්‍ය හඬක් තිබුණා යැයි කියූ නායකයින් මුස්ලිම් ප්‍රජාව වෙනුවෙන් කළේ කුමක්ද?" යන ප්‍රතිප්‍රශ්නය මෙම ජාතික ජන බලවේගයේ මුස්ලිම් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් අතරද සුලබය.

පසුගිය කාලයේ මුස්ලිම් මන්ත්‍රීවරු වාර්ගික හා ආගමික හැඟීම්වලට මුල්තැන දෙමින් උතුරු නැඟෙනහිර ඡන්ද බැංකු රඳවා ගත්හ. ඔවුන් ප්‍රාදේශීය හැඟීම් සහ ප්‍රාදේශීය බෙදීම් අවුස්සමින් කෙටි දේශපාලන වාසි තකා ව්‍යාපාරික දේශපාලනය අනුගමනය කළහ. ඔවුන් වෙනත් ජන කොටස් සමඟ හොඳ සබඳතාවයක් ගොඩනඟා ගන්නවා වෙනුවට බෙදීමේ උපක්‍රම හරහා තම දේශපාලන බලය පවත්වාගෙන ගියා.

1990 දශකයෙන් පසු අවස්ථාවාදී දේශපාලනයට අත ගැසූ මුස්ලීම් බහිෂ්කාරවාදී දේශපාලකයින්, සාම්ප්‍රදායික මුස්ලිම් දේශපාලඥයන් සහ පැරණි සංවිධාන ජනතාවගේ මූලික අවශ්‍යතා සහ ගැටලු සපුරාලීමට අපොහොසත් වීමත් සමඟ එය මුස්ලිම් තරුණ ප්‍රජාව අතර මන්දගාමී දේශපාලන දැනුවත් භාවයක් ඇති කිරීමට පටන් ගත්තේය. ;

මෙලෙස උගත් දෙමළ, මුස්ලිම් සහ සිංහල තරුණයන් පැරණි වාර්ගික හා පන්ති භේදයන් ඉක්මවා විනිවිදභාවය, දූෂණයෙන් තොර පාලනය සහ සමාජ සාධාරණත්වය සඳහා ප්‍රමුඛත්වය දීමට පටන් ගත්හ. ඒ සඳහා මහජන විමුක්ති පෙරමුණ සහ ජාතික ජනතා ශක්තිය 2015 න් පසු ඔවුන් වෙනුවෙන් වේදිකාවක් සකස් කිරීම ආරම්භ කළා. 

ජාතික ජන බලය (NPP) විසින් "දූෂණයෙන් තොර දේශපාලනය" සහ "කුල භේදයෙන් ඔබ්බට සමගිය" වැනි සටන් පාඨ තරුණයින් අතර ජනප්‍රිය විය. එහි ප්‍රතිඵලයක් ලෙස, මුස්ලිම්, සිංහල, දෙමළ ප්‍රජාවන් වාර්ගික හා ආගම් භේදයකින් තොරව සාම්ප්‍රදායික මුස්ලිම් නායකත්වයන් සහ පක්ෂ ප්‍රතික්ෂේප කරමින් NPP ලකුණින් තරඟ කළ මුස්ලිම් අපේක්ෂකයින්ට ඡන්දය ප්‍රකාශ කළහ. ඊට අමතරව මුස්ලිම් නියෝජිතයින්ට ජාතික ලැයිස්තුව හරහා පාර්ලිමේන්තුවට යාමට අවස්ථාව ලබාදුන්නා.

දැනට පාර්ලිමේන්තුවේ සම අනුග්‍රහය දක්වන ජාතික ජන බලයේ (NPP) මුස්ලිම් මන්ත්‍රීවරුද එසේමය 
ආගමේ නාමයෙන් භේද ඇති නොකර සියලුම ජාතීන් අතර වාර්ගික සහජීවනය වර්ධනය කිරීමට ඔවුහු වෙහෙසෙති. වැදගත්ම දෙය නම් ආගමේ නාමයෙන් දේශපාලන වාසි තකා හෝ සංවර්ධනයේ නාමයෙන් අරාබි රටවලින් ස්වකීය වාසි ලබාගැනීමට ශුද්ධ වූ කුර්ආනය සහ හදීස් භාවිතා නොකළ යුතුය.

රජයේ ඉඩම් ආක්‍රමණය නොකිරීමට සහ දේශපාලන බලය යොදාගෙන තම ඥාතීන්ගේ නමින් රජයේ ඉඩම් කොන්ත්‍රාත්තු ලබා නොගැනීමයි. ගොඩනැගිලි සහ අධිවේගී මාර්ග සඳහා ඉදිකිරීම් කොන්ත්‍රාත්තු මගින් කොමිස් මුදලක් ලබා නොගත යුතු අතර ප්‍රොක්සි නාමයෙන් වත්කම් රැස් නොකළ යුතුය.

NPP හි මුස්ලිම් මන්ත්‍රීවරු මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්ද ජාතික පක්ෂවලට ඇප නොදී, පාලන තන්ත්‍රය වෙනස් කිරීමට කෝටි ගණන් මුදල් නොගෙන, දූෂණයෙන් තොර, වාර්ගික හා ආගම් භේදයෙන් ඔබ්බට "ඒකාබද්ධ ශ්‍රී ලංකාවක්" ගොඩනඟමින් පිරිසිදු දේශපාලනයේ හවුල්කරුවන් සහ සංචාරකයින් වෙති.

එසේම අද NPP යේ මුස්ලිම් මන්ත්‍රීවරුන් විවේචනය කරන්නන්ට ඇති ප්‍රශ්නය වන්නේ 'ප්‍රජාව රකිනවා' කියමින් අතීතයේ මුස්ලිම් ප්‍රජාව විකුණාගෙන ආත්මාර්ථකාමීත්වය සොයා ගිය දේශපාලන සංස්කෘතිය වෙනුවට "ජාතික සමගිය සහ ඒකාග්‍රතාවය සමාජයේ සැබෑ ප්‍රගතිය" බව ඔවුන් ඔප්පු කරමින් සිටීමයි.

සාම්ප්‍රදායික මුස්ලිම් දේශපාලනය ක්‍රියාත්මක වූයේ අන්ධ "සමාජ හැඟීම් සහ අනන්‍යතා දේශපාලනය" පදනම් කරගෙනය. එහෙත් සත්‍ය වන්නේ ජාතික ජන බලවේගයේ මුස්ලිම් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් ජනතාව බෙදන ආත්මාර්ථකාමී දේශපාලනයෙන් බැහැරව "ජාතික සමගිය" දේශපාලන විලාසය අනුගමනය කරමින් සිටීමයි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
තිගනාරන් සඟරාවට
21-08-2026
සිංහල පරිවර්තනය සමඟ).தனித்துவ அரசியலில் இருந்து ஒருமித்த இலங்கையை நோக்கி... தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் உறுப்பினர்களின் வகிபாகம். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 21, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.