2026 ஆம் ஆண்டின் முதலாவது காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!
காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களின் ஒருங்கிணைப்பில், பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில், இன்று (30) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டு, பிரதேச அபிவிருத்தி தொடர்பான தனது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தார்.
இதன்போது, கடந்த காலங்களில் காத்தான்குடி நகர சபையின் ஊடாகவும், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களினூடாகவும் சமர்ப்பிக்கப்பட்டு, பிரதேச அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக காத்திருந்த அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், பிரதேச செயலகத்திற்காக மத்திய மற்றும் மாகாண நிதிகளின் கீழ் கடந்த வருடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகளும் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில்,
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர்,
கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் யு.கே. அப்துல்லாஹ்,
உதவி பிரதேச செயலாளர் சில்மியா,
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தனுஜா,
பிரதேச செயலக கணக்காளர்,
திணைக்களத் தலைவர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் நடைபெறும் 2026 ஆம் ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-- ஊடகப்பிரிவு
2026 ஆம் ஆண்டின் முதலாவது காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 30, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 30, 2026
Rating:





கருத்துகள் இல்லை: