Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டண அறவீடு தொடர்பாக கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள அறிவித்தல்

 

கொழும்பு மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டபடி, எரிபொருள் நிலையங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கு வந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, வாகன நிறுத்துமிடக் கட்டணம் அறவீடு 18.03.2026 முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டது.


அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறை மற்றும் வாகன இலக்கம் (ஒற்றை/இரட்டை) ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவதால், எரிபொருள் நிலையங்களுக்கு அருகிலுள்ள வாகன வரிசைகள் குறைவடைந்துள்ளதாகக் காணப்படுகிறது.

எனவே, கொழும்பு மாநகர சபை, நிதி மீதான நிலைக்குழுவில், வாகன நிறுத்துமிடங்களின் முகாமைத்துவ கட்டணம் அறவீட்டை 23.03.2026 அன்று காலை 6.00 மணி முதல் வழக்கம் போல் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டண அறவீடு தொடர்பாக கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள அறிவித்தல் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 23, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.