Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் அவர்களின் மறைவையொட்டி காத்தான்குடி மீடியா போரத்தின் அனுதாபச் செய்தி


கிழக்கிலங்கையின் நிந்தவூரைச் சோந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபுஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவுச் செய்தி எமக்கு மிகுந்த துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊடகத்துறையில் பல தசாப்தங்களாகச் செயல்பட்டு, உண்மை, நீதி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செய்தியறிக்கைகளின் மூலம் சமூகத்திற்கு பெரும் சேவையாற்றியவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபுஷணம் ஏ.எல்.எம். சலீம் ஆவார். தனது தொழில்சார்ந்த நேர்மை, துல்லியமான செய்தி அணுகுமுறை மற்றும் மக்களின் குரலை வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அவர் ஊடகவியலாளர்களுக்கிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.

நிந்தவூர் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் சமூக நலனுக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாதுஇ இளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும்இ ஊக்கமளிப்பவராகவும் விளங்கினார். அவருடைய அனுபவங்களும் ஆலோசனைகளும் பலரின் ஊடகப் பயணத்தில் உறுதுணையாக அமைந்துள்ளன.

அவரது மறைவு ஊடகத்துறைக்கு மட்டுமல்லாது, உண்மையை மதிக்கும் ஒவ்வொருவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் விட்டுச் சென்ற பண்புகள், கொள்கைகள் மற்றும் சேவைகள் என்றும் நினைவுகூரப்படும்.

இவ் வேளையில், அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் உறவுகளுக்கு அல்லாஹ் மன அமைதியையும் சகிப்புத்தன்மையையும் வழங்குவானாக.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸில் உயர்ந்த நிலையை அருள்வானாக. ஆமீன்.

தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்
காத்தான்குடி மீடியா போரம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் அவர்களின் மறைவையொட்டி காத்தான்குடி மீடியா போரத்தின் அனுதாபச் செய்தி Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.