• Home
  • About Us
  • Contact Us
lankanvoice media

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home sri lanka புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுக்குழு இராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுக்குழு இராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு

www.lankanvoice.lk மார்ச் 28, 2026 sri lanka

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுக்குழுக்களின் தலைவர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 26ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.


மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேரா, ஆஸ்திரியா மற்றும் PRUN தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி டயனி மெண்டிஸ், எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி என்.ஐ.டி. பரணவிதான, ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமன் குமார சந்திரசிறி மற்றும் பாலஸ்தீனத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எம். பாரூக் எம். பௌஸர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.



புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் தேசிய நலன்களை முன்னெடுப்பதில் அவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 


அத்துடன், நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதில் அவர்களின் கூட்டுப் பொறுப்பு குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


தத்தமது நாடுகள் மற்றும் சர்வதேசத் தளங்களில் நிலையான, தொழில்முறை சார்ந்த மற்றும் மூலோபாய ரீதியான ஈடுபாடுகளின் ஊடாக, சர்வதேச ரீதியில் இலங்கையைப் பற்றிய நேர்மறையான மற்றும் நம்பகமான பிம்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.


இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப் போகக்கூடிய, குறிப்பாகப் பேண்தகு நிலை, புத்தாக்கம் மற்றும் நீண்டகாலப் பெறுமதியினை அதிகரிக்கச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறைகளில் உயரிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை இலங்கைக்குக் கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு தூதுக்குழுத் தலைவர்களைப் பிரதமர் ஊக்கப்படுத்தினார்.


இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் பன்முகப்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இச்சந்திப்பின்போது விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் நியமனம் பெற்ற தூதுக்குழுத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பிரதமர் ஊடகப் பிரிவு


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுக்குழு இராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 28, 2026 Rating: 5

Tags :

sri lanka
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

sri lanka

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • காத்தான்குடி மண்ணின் கல்வி சாதனையாளர்கள் 1978 Fun boys குழுமத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
    1978 Fun boys குழுமத்தினால் தங்களது வகுப்பறை தோழர்களின் பல்வேறு சாதனைகளை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று கட்டுபவன் வில {கட்டுவன் புல்} கி...
  • NPP யின் "சிஸ்டம் சேஞ்ச்" எதிர்கட்சிகளையும் மாற்றியமைக்கும் புதிய அரசியல் திசை!
    (அஹமட் இர்ஷாட்) (සිංහල පරිවර්තනය සමග)NPP யின் "சிஸ்டம் சேஞ்ச்" எதிர்கட்சிகளையும் மாற்றியமைக்கும் புதிய அரசியல் திசை! பாரம்பரிய அரச...
  • ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் அதிகாரிகள் பங்கேற்புடன் கையளிப்பு
    மட்டக்களப்பில் 'ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் அதிகாரிகள் பங்க...
  • வாரியபொலவில் போலீசார் துப்பாக்கி முனையில் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்கள்.
    வாரியபொலவில் காவல் நிலையம் அருகே, காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று துப்பாக்கி முனையில் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்ற காணொளி தற்போது சம...

Recent Posts

காத்தான்குடி கலாச்சார அபிவிருத்தி அதிகார சபையின் புதிய நிருவாகசபை உறுப்பினர்கள்.

கலாச்சார அலுவல்கள் அமைச்சின்,கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ் செயற்படும் காத்தான்குடி கலாச்சார அபிவிருத்தி அதிகார சபையின் புதிய நிருவாக...

Interested

  • மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு
    ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு, சங்கத்தின் தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிராந்திய கலாசா...
  • தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அனுப்பிய மடல்.
    மேன்மைதங்கிய திரு.  அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம்,  கொழும்பு – 01. மேன்மைதங...
  • க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவிக்கு காத்தான்குடி மீடியா போரம் கௌரவம்!
    (எம்.ஐ.அப்துல் நஸார்) நடைபெற்று முடிந்த க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுச் சித்தியடைந்து ஊருக்கும் அமைப்பிற்கும்...
  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்
    காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று, புதன்கிழமை (19/08/2026) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வைத்தியசாலையின் நிலை, கு...
All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.