மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் தொலைபேசி வாயிலாக முக்கிய கலந்துரையாடல்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் தொலைபேசி வாயிலாக முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிப்பதற்கான (De-escalation) அவசரத் தேவை குறித்து கத்தார் அமீர் வலியுறுத்தினார். குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதனை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து இரு தலைவர்களும் இதன்போது விரிவாக ஆராய்ந்தனர்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த மத்தியஸ்த முயற்சிகளுக்கு கத்தார் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என அமீர் இதன்போது தெரிவித்தார். மேலும், பிராந்திய மோதல்கள் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் கவலை வெளியிட்டனர்.
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளே முதன்மையான வழிமுறை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய கத்தார் அமீர், அமைதியை நிலைநாட்ட அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட கத்தார் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
මැදපෙරදිග කලාපීය නොසන්සුන්තාවය සමනය කිරීමේ අවශ්යතාවය කටාර් එමීර්වරයා ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්රම්ප් මහතාට අවධාරණය කරයි.
කටාර් එමීර් අති උතුම් ෂෙයික් තමීම් බින් හමාඩ් අල් තානි (Sheikh Tamim bin Hamad Al Thani) මහතා සහ ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්රම්ප් මහතා අතර ඊයේ (24) දුරකථන සංවාදයක් පැවැත්විණි. එහිදී කලාපීය යුදමය වාතාවරණය සමනය කිරීම සහ ස්ථාවරත්වය ඇති කිරීම පිළිබඳව දීර්ඝ වශයෙන් කරුණු සාකච්ඡා වී ඇත.
විශේෂයෙන්ම ඇමරිකාව සහ ඉරානය අතර ඇති වී තිබෙන සටන් විරාම ගිවිසුම සහ එය තවදුරටත් තහවුරු කිරීම සඳහා වන ජාත්යන්තර ප්රයත්නයන් පිළිබඳව මෙහිදී අවධානය යොමු කෙරිණි. පකිස්ථානයේ ඉස්ලාමාබාද් නුවරදී ආරම්භ වීමට නියමිත සාම සාකච්ඡා සඳහා පකිස්ථානය දරන මැදිහත් වීමේ උත්සාහයන්ට කටාර් රාජ්යයේ පූර්ණ සහයෝගය ලබා දෙන බව එමීර්වරයා මෙහිදී ප්රකාශ කළේය.
කලාපීය නොසන්සුන්තාවය හේතුවෙන් ජාත්යන්තර බලශක්ති වෙළඳපොළට සහ සැපයුම් දාමයන්ට එල්ල වී ඇති බලපෑම පිළිබඳව ද නායකයන් දෙපළ මෙහිදී අදහස් හුවමාරු කර ගත්හ. ඕනෑම අර්බුදයකදී ඉරාජ්ය තාන්ත්රික විසඳුම් කෙරෙහි අවධානය යොමු කිරීමේ වැදගත්කම කටාර් එමීර්වරයා මෙහිදී නැවතත් අවධාරණය කර සිටියේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Qatar’s Emir Stresses Need for De-escalation During Call with President Trump
The Emir of Qatar, HH Sheikh Tamim bin Hamad Al Thani, held a telephone conversation with US President Donald Trump on Friday (24), highlighting the urgent need to de-escalate regional tensions.
During the call, the two leaders reviewed the latest regional developments, particularly the ceasefire agreement between the United States and Iran and international efforts to consolidate it. The Emir affirmed Qatar’s continued commitment to supporting the mediation efforts led by Pakistan to enhance regional security and stability.
They also discussed the implications of the current situation on international maritime security and the stability of global energy markets and supply chains. Sheikh Tamim emphasized the importance of prioritizing diplomatic solutions and peaceful means to address regional crises, ensuring the safety and security of future generations.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: