இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப் பரீட்சை 2023 (2026) வெற்றிகரமாக நிறைவு
நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் போட்டிப் பரீட்சை நேற்று (24) நாடு முழுவதும் 1,048 பரீட்சை நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பரீட்சைக்காக அரச சேவையிலுள்ள 66,991 விண்ணப்பதாரர்களும், ஏனைய பிரிவைச் சேர்ந்த 96,442 விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்திருந்ததுடன், விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகளையும் பரீட்சைகள் திணைக்களம் செய்துகொடுத்திருந்தது.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 26, 2026
Rating:

கருத்துகள் இல்லை: