Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஐ.பி.எல். வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? play-off சுற்று நாளை ஆரம்பம்!

IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. play-off சுற்று இன்று (26) ஆரம்பமாகின்றது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் play-off சுற்றுக்கு முதன் மூன்று அணிகளாக முன்னேறின.

இந்நிலையில்  நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியுடன், ராஜஸ்தான் அணி மோதியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ஓட்டங்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்து play-off சுற்றுக்கு முன்னேறியது.

play-off தகுதிச்சுற்று 1 போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்குகிறது.

இதில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.

தோற்கும் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வெல்ல மற்றொரு வாய்ப்பு (தகுதிச்சுற்று 2-ல்) கிடைக்கும்.

எலிமினேட்டர் சுற்று (Eliminator) புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 4-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும்.

எலிமினேட்டர் சுற்றுப் போட்டி 27 ஆம் திகதி முல்லன்பூரில் நடைபெற உள்ளது.

இதில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி, தகுதிச்சுற்று 1-ல் தோற்ற அணியை அடுத்த போட்டியில் எதிர்கொள்ளும்.

தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியும், தகுதிச்சுற்று 1-ல் தோற்கும் அணியும் தகுதிச்சுற்று 2-ல் மோத உள்ளன.

இந்தப் போட்டி மே 29 ஆம் திகதி முல்லன்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தகுதிச்சுற்று 1-ல் வென்ற அணியுடன் மோதும்.

ஐ.பி.எல். வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? play-off சுற்று நாளை ஆரம்பம்! Reviewed by www.lankanvoice.lk on மே 26, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.