சர்வதேச பால் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலயத்தில் தூய பசும்பால் வழங்கி வைப்பு .
சர்வதேச பால் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி
அஷ்-ஷூஹதா வித்தியாலயத்தில் தூய பசும்பால் வழங்கும் நிகழ்வு அதிபர் MCM. முனீர் தலைமையில் இடம்பெற்றது.
சர்வதேச பால் தினத்தினை முன்னிட்டு (01.06.2026 திங்கள்) ஜூன் முதலாம் திகதி காத்தான்குடி கால்நடை அபிவிருத்தி உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி
அஷ் -ஷூஹதா பாடசாலை மாணவர்களுக்காக பசும்பால் விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காத்தான்குடி கால்நடை உற்பத்தி சுகாதார வைத்திய அதிகாரி Dr.S.மரியஹர்ஷினி அவர்களும் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் M.I.ரஹ்மத்துல்லாஹ் உட்பட அதிபர், ஆசியர்கள், உத்தியோகஸ்தர்கள், பெற்றோர் சமூகம் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் தூய பசும்பால் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பால் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலயத்தில் தூய பசும்பால் வழங்கி வைப்பு .
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 01, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 01, 2026
Rating:







கருத்துகள் இல்லை: