Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீனுக்கு கனடாவில் பாராட்டு விழா


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான என். எம். அமீன் அவர்களைக் கௌரவிக்கும் வகையிலான விசேட சந்திப்பும் பாராட்டு விழாவும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவில் நடைபெறவுள்ளது. 

'ஸ்ரீ லங்கா முஸ்லிம் கம்யூனிட்டி கனடா' (Sri Lanka Muslim Community Canada) அமைப்பினால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் ஸ்கார்பரோவில் அமைந்துள்ள அமானா மாநாட்டு மண்டபத்தில் (Amana Conference Centre, Scarborough) அன்றைய தினம் பி.ப. 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஊடகத்துறை மற்றும் சமூக மேம்பாட்டிற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துச் சேவையாற்றிய என். எம். அமீன் அவர்களின் பணிகளைக் கௌரவிக்கும் வகையிலும், அவருடன் கனேடிய வாழ் மக்கள் கலந்துரையாடும் வகையிலும் இச்சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தற்போது 'உதயம்' பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா  (Muslim Council of Sri Lanka) தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் என். எம். அமீன் அவர்கள், தினகரன் உள்ளிட்ட லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களின் முன்னாள் முகாமைத்துவ ஆசிரியராகவும், நவமணி  தேசியப் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் (Sri Lanka Muslim Media Forum) முன்னாள் தலைவராகவும் பணியாற்றி ஊடகத்துறையில் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த விசேட பாராட்டு விழாவில் கனேடிய வாழ் இலங்கை சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நலன்புரி அமைப்பினர் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீனுக்கு கனடாவில் பாராட்டு விழா Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 23, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.