Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 60,000 இற்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

மன்னார், சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் 2026 ஜூலை 09ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 60,448 இற்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள், 12 டிங்கி படகுகள் கடற்படையினர் கைப்பற்றினர்.

இதற்கமைய, வடமத்திய கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா நிறுவனத்தினால் மன்னார், சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சில சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன. 

இதன்போது, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தரைக்கு கடத்தப்பட்ட பெருமளவிலான கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட சந்தேக நபர்கள் 21 முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட மன்னார் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், கடல் அட்டைகளின் இருப்பு, டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீனவப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 60,000 இற்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.