காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் மகத்தான கௌரவம் வழங்கப்பட்டது.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் இவ்வருடம் 2026 தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில்
தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் தரம் - 01 முதல் 5 வரை கற்பித்த ஆசிரியர்களுக்கும் மகத்தான கௌரவம் வழங்கப்பட்டது.
2026ம் ஆண்டு இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 65 மாணவ மாணவிகள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டி இருந்தார்கள்.
மேலும் பரீட்சைக்குத் தோற்றிய 172 மாணவர்களில் 162 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 92.4% என்ற உயர்சாதனையை இப் பாடசாலை பெற்றிருந்ததது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 65 மாணவ மாணவிகளை சித்தியடையச் செய்து வலய பாடசாலைகளுக்கிடையே கூடிய எண்ணிக்கையான மாணவர்களை சித்தியடையச் செய்த பெருமையை இப் பாடசாலை தொடர்ந்தும் நிலைநாட்டி இருந்தது.
இன்று (22) வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகையில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் K. ஜெயவதனன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் காத்தான்குடி கேட்டக் கல்விப் பணிப்பாளர் AJ. Marzook (SLEAS) அவர்களும் மேலும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் Mr. NM. சாலித் SLEAS (உடற்கல்வி) அவர்களும், மட்டக்களப்பு மத்தி வலய விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ALM. பாயிஸ் மற்றும் வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள் சகிதம் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வுக்குரிய ஏற்பாடுகளை தரம் 05 பெற்றோர் ஒழுங்மைப்புச் செய்ததுடன் இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உதவிச் செயலாளர் AMM. நிவாஸ் அவர்களும் இப் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர்களான ஜலால்தீன் ஆசிரியர், இப்றாஹிம் ஆசிரியர், அலி அக்பர், ஜஹ்பர் ஆசிரியர்களினால் விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொண்டமை விசேட அமசமாகும்.
இந் நிகழ்வில் உரையாற்றிய இவ் வித்தியாலய அதிபர் அஷ்செய். UL. மன்சூர் அவர்கள் குறிப்பிடும் போது இவ் உயரிய அடைவை எட்டுவதற்கு அயராது பாடுபட்டு இம் மாணவர்களுக்கு கற்பித்த 04 ஆசிரியர்களையும் இதற்காக சிறப்பான வழிகாட்டல்களை வழங்கிய ஆரம்பப் பிரிவு பிரதி அதிபர் திருநிறைச் செல்வி அவர்களையும் வெகுவாகப் பாராட்டியதுடன் இவ் அடைவு மட்டங்களை மாணவர்கள் அடைவதற்கு வழிப்படுத்திய பெற்றோருக்கும் இவ் வித்தியாலய முதல்வர் அவர்களினால் பாராட்டப்பட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி பிரதிக் கல்விப் பணிப்பாளர் K. ஜெயவதனன் அவர்கள் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையானது இவ் வலயத்தின் பெறுபேற்றை தேசிய மட்ட உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் முக்கிய பாடசாலையாகவும் இவ் வலயத்தின் முதன்மையான அடைவு மட்டங்களுக்கு தொடச்சியான பங்களிப்பை வழங்கி வரும் பாடசாலை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை என புகழாரம் செய்ததோடு இவ் வித்தியாலயத்தின் முதல்வர் அவர்களுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ள உயரிய விருதான குருபிரதீபா விருதுக்காக மட்டக்களப்பு மத்தி வலயத்தினாலும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினாலும் இவ்வருடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இவ் விருது கிடைகப் பெற மிகவும் பொருத்தமானவர் என்றும் குறிப்பிட்டதுடன் முற்கூட்டிய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் மற்றொரு சிறப்பபம்சமாக ஆரம்பப் பிரிவு பிரதி அதிபர் திருநிறைச் செல்வி அவர்களினால் விசேட Presentation வழியாக ஆரம்பப் பிரிவு தொடர்பாகவும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான கடந்த 10 வருட முன்னேற்றம் தொடர்பான விசேட முன்வைப்பு ஒன்றும் நிகழ்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில் இப் பாடசாலையின் பிரதி உதவி அதிபர்கள் மற்றும் அசிரியர்கள் பகுதித்தலைவர்கள் உட்டபட SDEC, PPA உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் நவலன்விரும்பிகள் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Mr. APM. Jalaldeen BBA
ஊடகப் பிரிவு
மீரா பலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி
காத்தான்குடி.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் மகத்தான கௌரவம் வழங்கப்பட்டது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 22, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 22, 2026
Rating:















கருத்துகள் இல்லை: