மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 35 பேர் நியமனம்!
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 35 பேர் நியமனம்!
இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன
நாட்டின் நகர்ப்புற போக்குவரத்து சேவையை மேலும் திறம்பட முன்னெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனம் தனது நிர்வாக மற்றும் செயற்பாட்டு பணிகளுக்காக மேலும் 35 பேரை புதிதாக இணைத்துள்ளது.
இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று (2026.09.22) பத்தரமுல்லை, ‘சுஹுருபாய’ கட்டிடத்தின் 19ஆவது மாடியில் அமைந்துள்ள பிரதான கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
புதிதாக நியமிக்கப்பட்ட 35 பேரில்,
🔹 14 மெட்ரோ பேருந்து சாரதிகள்
🔹 18 நடத்துநர்கள்
🔹 2 மேற்பார்வையாளர்கள்
🔹 1 மின்சார தொழில்நுட்பவியலாளர்
உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மெட்ரோ டிப்போக்களை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் 7 மெட்ரோ பேருந்து வழித்தடங்களில் பயணிகள் போக்குவரத்து சேவைக்காக புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த நிகழ்வில் மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் யூ.பி. திலகரத்ன, பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் பி.எம். பியதிலக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) எம்.எஸ். அவந்தி சேனாரத்ன, தொழிற்சங்க செயலாளர் எஸ்.பி. விதானகே உள்ளிட்ட அதிகாரிகள், புதிதாக நியமனம் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 35 பேர் நியமனம்!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 22, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 22, 2026
Rating:








கருத்துகள் இல்லை: