Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் குழுவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு சந்திப்பு..!

கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மலேசியா, வியட்னாம், தாய்லாந்து நாடுகளின் தூதுவர்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று (11) அருகம்பே Blue Wave ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினர்.



​இதன்போது, கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வாய்ப்புகள், தற்போதைய சமூகப் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பிராந்திய ரீதியாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து தூதுவர்கள் குழுவினருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக, தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.



​இச்சந்திப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் அப்துல் வாசித், எம்.எஸ் உதுமாலெப்பை உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் குழுவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு சந்திப்பு..! Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.