கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளரை சந்தித்தார் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
அண்மையில் கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக நியமனம் செய்யப்பட்ட குணநாதன் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் திருகோணமலையில் உள்ள பிரதம செயலக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, புதிய பிரதம செயலாளருக்கு தனது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய சமூக, பொருளாதார நிலவரங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய துரித அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மாகாண நிர்வாகத்தின் துரித செயற்பாடு மற்றும் முழுமையான ஒத்துழைப்பை வேண்டியதுடன் , மாவட்ட மக்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக முன்னெடுக்க வேண்டிய சிறப்புத் திட்டங்கள் குறித்தும் கருத்தாடல் இடம்பெற்றது ,
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், மக்களின் நலன் சார்ந்த செயற்றிட்டங்களுக்கும் கிழக்கு மாகாண நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இதன்போது பிரதம செயலாளரிடம் கோரிக்கை விடுத்தார்.
மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிர்வாக மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இரு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளரை சந்தித்தார் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 21, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 21, 2026
Rating:


கருத்துகள் இல்லை: