Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டத்தைப் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.


சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டத்தைப் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு. 
 

தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் 91,810 மக்களுக்குப்பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டத்தைப் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று (10) பிற்பகல் கலந்து கொண்டார்.


சீன அபிவிருத்தி வங்கி (CDB) வழங்கிய சலுகைக் கடனின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2022 மே மாதம் முதல் 2024 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இதன் தேசிய முக்கியத்துவத்தை உணர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் நிதியையும் பயன்படுத்தி இத்திட்டத்தின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்ததையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும்,இதற்காகப் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.








சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டத்தைப் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு. Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.