Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நாங்கள் ஒரு போதும் சூழ்ச்சி செய்து வலுக்கட்டாயமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்: மக்கள் நிராகரித்தால் அம்முடிவை ஏற்போம்

சூழ்ச்சிகள் மூலம் வலுக்கட்டாயமாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் எந்தவொரு எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், மக்கள் தங்களை நிராகரித்தால் ஆட்சியைக் கைவிடுவதில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது என்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாதெரிவித்துள்ளார்.


தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் சுயநலமாக எதையாவது அடைந்துகொள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே வந்துள்ளோம். இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். எனவே, மக்கள் எங்களை நிராகரிப்பார்களாயின் நாங்கள் ஆட்சியில் தொடர வேண்டிய அவசியமில்லை.

கொள்ளையடித்தவர்கள், சுயலாபம் தேடியவர்கள் மற்றும் ஊழல், மோசடிகளை மூடிமறைக்க முற்பட்டவர்களே, மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முயற்சிப்பார்கள்.

இந்நிலையில் சட்ட விசாரணைகளிலிருந்து தப்புவதற்கும், தங்களின் தவறுகளை மூடிமறைப்பதற்குமே மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் தற்போது ஒன்றிணைய முற்படுகின்றனர்.

எங்களுக்கு இவ்வாறான எந்தவொரு தேவையும் கிடையாது. நாட்டுக்குச் சேவையாற்றவே நாம் வந்துள்ளோம், அந்தப் பணியை அர்ப்பணிப்புடன் செய்வோம். மக்கள் எங்களை வீட்டிற்கு அனுப்பத் தீர்மானித்தால், அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு விலகுவோம்.

மக்களுடன் இணைந்து இந்நாட்டைக் கட்டியெழுப்பும் வரை அரசியல் செய்யவே நாம் விரும்புகின்றோம். எனினும், அதிகாரத்தைக் கைவிடுவது குறித்து எங்களுக்கு எவ்விதக் கவலையும் இருக்காது. சூழ்ச்சிகள் செய்து, பலவந்தமாக ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இல்லை. மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், எதிர்காலத்திலும் இருப்பார்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கும் (NPP) ஜே.வி.பிக்கும் (JVP) இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லை. நாங்கள் முழுமையான ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயல்பட்டு வருகின்றோம்,” என்று ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

நாங்கள் ஒரு போதும் சூழ்ச்சி செய்து வலுக்கட்டாயமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்: மக்கள் நிராகரித்தால் அம்முடிவை ஏற்போம் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.