Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஓட்டமாவடியில் ஆரம்பிக்கப்படும் தாய் சேய் மகப்பேற்று நிலையம்.


கோறளைப்பற்றுமேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஓட்டமாவடி வடக்கு - B/2 கிராம சேவகர் பிரிவில் நீண்டகால குறைபாடாக இருந்து வரும் தாய் சேய் மகப்பேற்று (பிணியாய நிலையம்) சிகிச்சை நிலையத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நேற்று 04-09-2026ம் திகதி இடம் பெற்ற ஓட்டமாவடி பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சிகிச்சை நிலையத்தினை  தற்காலிமாக ஆரம்பிப்பபதற்கான முடிவு எடுக்கப்பட்டது.


ஓட்டமாவடி வடக்கு B/2 பிரிவிற்கான பிரஜாசக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாடினால் முன்மொழியப்பட்ட குறித்த பிரேரரணையின் தேவையினை சிரேஷ்ட்ட பொதுச் சுகாதார பரிசோதாகர் ஏ.எல்.நெளபர் மேலும் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எஸ்.எம்.ஹலால்த்தீன் மற்றும் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் ஆகியோர்களின் விருப்பத்துக்கு அமைவாக பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி ஒழுங்கமைப்புக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபுவினால் மிக விரைவில் தற்காலிகமாக சிகிச்சை நிலையத்தினை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பபட்டது.


குறித்த ஓட்டமாவடி பிரதேசசெயலகப் பிரிவில் அதிக மக்கள்தொகையினை கொண்ட ஓட்டமாவடி வடக்கு B/2 கிராம சேவகர் பிரிவானது குறித்த சிகிச்சை நிலையத்தினை ஆரம்பிபப்பதற்கான நிலையான கட்டடம் ஒன்றின் குறைபாட்டின் காரணமாக நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த நிலையிலேயே ஓட்டமாவடி பிரதேச செயலக பழைய கட்டடட தொகுதியில் பிரதேச செயலாளர் சிகிச்சை நிலையத்தினை தற்காலிகமாக ஆரம்பிப்பபதற்கான விப்பத்தினை தெரிவித்திருந்தார்.


அந்த வகையில் ஓட்டமாவடி வடக்கு B/2 பிரதேச கற்பிணி தாய்மார்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்துள்ள பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், கோறளைப்பற்று மேற்கு பொதுச்சுகாதார பரிசோதக நிலையத்தினால் சிகிச்சை நிலையத்தை ஆரரேர்பிப்பதற்கான ஆரம்ப வேலைகள் அனைத்தும் சில நாட்களுக்குள் இடம் பெறும் என சிஷேட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நெளபர் தெரிவித்தார்.


அத்தோடு குறித்த தாய் சேய்மகப்பேற்று நிலையத்திற்கான நிலையான கட்டடம் ஒன்றினை அமைப்பதற்கான சரியான இடம் ஒன்றினை பிரதேச செயலகம் மிக விரைவில் அடையளப்படுத்தி தரும் பட்சத்தில் கட்டடத் தேவைகுறிய அனுமதிகளையும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து பெற்றுத்தருவாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் ஆரம்பிக்கப்படும் தாய் சேய் மகப்பேற்று நிலையம். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.