ஒருவரின் தேவையை அறிதல் – அக்கறை. அந்தத் தேவைக்கு உதவிக்கரம் நீட்டுதல் – மனிதநேயம். உளநிலையை காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்.
ஒரு சக்கர நாற்காலி… ஒரு வாழ்க்கைக்கு புதிய நகர்வு
தேவையை அறிந்து உதவிக்கரம் நீட்டிய மனிதநேய உள்ளங்களுக்கு நன்றி!
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில், எமது உளசமூக ஆதரவு அமைப்பின் தன்னார்வத் தொண்டராக சேவையாற்றி வரும் திருமதி T. பிரதீபா அவர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் ஒருவருக்கு சக்கர நாற்காலி தேவைப்படுவதை அடையாளம் கண்டு எமது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் எமது உளசமூக ஆதரவு தொண்டராக சேவையாற்றி வரும் திருமதி V. சாருலதா அவர்களின் ஒருங்கிணைப்புடன், தேவையான சக்கர நாற்காலியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மனிதாபிமான உதவிக்கு Working Women Development Foundation (WWDF) அமைப்பின் இணைப்பாளர் திருமதி Selvarasa Sasiyanthini அவர்களின் ஆதரவும் ஒருங்கிணைப்பும் கிடைத்ததுடன், கனடாவில் வசிக்கும் ஓர் ஆதரவாளரின் உதவியுடன் புதிய சக்கர நாற்காலி எமக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் சக்கர நாற்காலி பயனாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு உளசமூக ஆதரவு மையத்தின் தலைவி திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் வழிநடத்தலில், கிழக்கு மாகாண இணைப்பாளர் திருமதி ஆர். சியாமளா அவர்களின் தலைமையில், அனைவரினதும் அக்கறை, ஒத்துழைப்பு மற்றும் மனிதநேயப் பங்களிப்புடன் நடைபெற்றது.
நிகழ்வில் உளசமூக ஆதரவு மையத்தின் தேசிய இணைப்பாளர் தேசபந்து கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
மேலும், Working Women Development Foundation (WWDF) அமைப்பின் இணைப்பாளர் திருமதி Selvarasa Sasiyanthini அவர்களும் கலந்து கொண்டு சக்கர நாற்காலியை வழங்கி வைத்தார்.
இந்த மனிதாபிமான உதவியை வழங்கிய Working Women Development Foundation (WWDF) அமைப்பிற்கும், அதன் இணைப்பாளர் திருமதி Selvarasa Sasiyanthini அவர்களுக்கும், கனடாவில் இருந்து ஆதரவு வழங்கிய அன்புள்ள நன்கொடையாளருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன், களத்தில் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை எமது கவனத்திற்கு கொண்டு வந்து, தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் எமது அனைத்து உளசமூக ஆதரவு தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒருவரின் தேவையை அறிதல் – அக்கறை.
அந்தத் தேவைக்கு உதவிக்கரம் நீட்டுதல் – மனிதநேயம்.
உளநிலையை காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்.
ஒருவரின் தேவையை அறிதல் – அக்கறை. அந்தத் தேவைக்கு உதவிக்கரம் நீட்டுதல் – மனிதநேயம். உளநிலையை காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 26, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 26, 2026
Rating:








கருத்துகள் இல்லை: