Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග).அதிகாரம் பரம்பரைச் சொத்தல்ல; மக்களால் தரப்படும் தற்காலிகப் பொறுப்பு! அநுராதபுரக் கூட்டம் உணர்த்தும் அரசியல் செய்தி.


සිංහල පරිවර්තනය සමග).அதிகாரம் பரம்பரைச் சொத்தல்ல; மக்களால் தரப்படும் தற்காலிகப் பொறுப்பு!
அநுராதபுரக் கூட்டம் உணர்த்தும் அரசியல் செய்தி.

அநுராதபுரத்தில் கூடியவர்கள் யார்? எங்கிருந்து அழைத்து வரப்பட்டார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? இதற்கான பதிலை நாட்டு மக்கள் தெளிவாகவே புரிந்ந்து வைத்துள்ளார்கள்.

அநுராதபுர மேடை பழைய குடும்ப அரசியலின் மீள் பிரவேசத்திற்கான வாசலாக மாறுமா.? அல்லது மக்கள் ஏற்கனவே வழங்கிய நிராகரிப்பை மீண்டும் நினைவூட்டும் அரசியல் தருணமாக மாறுமா என்பதே இன்றைய முக்கிய கேள்வியாகும்.

அரசியலில் அதிகாரத்தைத் குடும்ப வாரிசுரிமையாக்கும் பேராசையும், தள்ளாடும் வயதில் முன்னாள் தலைவர்களின் ஓய்வு உரிமையைப் பறித்து அவர்களைச் சங்கடமான நிலைக்குத் தள்ளும் குடும்ப அரசியலும் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் அரசியல் களத்தில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.



அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவினால் நாமல் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்ட விதம் குறித்து அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்களும் கவலைகளும் எழுந்துள்ளன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஒரு தலைவராகப் போற்றப்பட்டவர், தற்போதைய அரசியல் சூழலில் தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்காக முதிய வயதிலும் மேடைகளில் தோற்றுவிக்கப்படுவது பலராலும் விமர்சிக்கப்படுகின்ற விடயமாக மாறியுள்ளது.

இலங்கை அரசியலில் குடும்ப அரசியல் மற்றும் வாரிசுரிமை மோகம் முதிய தலைவர்களின் ஓய்வு உரிமையைப் பறித்து, அவர்களை எவ்வாறு பொது வெளியில் சங்கடமான நிலைக்குத் தள்ளுகின்றது என்பதற்கு அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுப் பெரமுனவின் கூட்டம் ஒரு சான்றாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும், அரசியல் அதிகாரத்தின் மீதான பேராசையும், தனது மகனை எதிர்கால அரசியலின் முக்கிய முகமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற குடும்ப அரசியல் நோக்கமும் ஒருவரை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்ல முடியும் என்பதற்கு அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்ட விதம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் பராக் ஒபாமா, ஜோர்ச் டபிள்யூ. புஷ், பில் கிளிண்டன் போன்ற முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது பதவிக்காலம் முடிந்தவுடன் ஆட்சி அதிகாரங்களில் இருந்து முழுமையாக விலகி, கெளரவமான ஓய்வு வாழ்க்கையையும், சமூகப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் குறிப்பாக ராஜபக்ச குடும்பம் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும், அடுத்த தலைமுறையினரிடம் அதனைக் கைமாற்றுவதற்கும் காட்டும் தீவிரமானது, முன்னாள் தலைவர்களின் வரலாற்றுச் சின்னங்களையும் கெளரவத்தையும் மக்கள் மத்தியில் மங்கச் செய்துள்ளது என்ற பார்வை அரசியல் அவதானிகளிடம் உள்ளது.

ஒரு காலத்தில் நாட்டின் பெரும்பான்மையான மக்களால் போற்றப்பட்ட ஒரு தலைவர், குடும்பத்தின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் பேராசைக்காகவும் தள்ளாடும் வயதில் பொது மேடைகளில் தள்ளாடிக் கொண்டு தோன்றுவது அவரது கடந்தகால சாதனைகளையும் பின் தள்ளியுள்ளதுடன், இலங்கை அரசியலில் குடும்ப வாரிசுரிமை எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.

மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை உரிய காலத்தில் தக்கவைத்துக்கொண்டு அரசியலிலிருந்து மரியாதையுடன் ஒதுங்கியிருந்தால் மஹிந்த ராஜபக்சவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதே பரவலான கருத்தாகவுள்ளது.

மேலும், தங்களது அரசியல் பாரம்பரியத்தைத் தக்கவைக்க மகனை முன்னிறுத்தும் முயற்சிகள், ஒரு காலத்தில் பலத்த வரவேற்பைப் பெற்ற தலைவர்களின் பாரம்பரிய அரசியல் மரபுக்குத் தங்களது கைகளாலேயே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்தோடு, தொடர்ச்சியான அரசியல் நகர்வுகள் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்திகள் காரணமாக, இலங்கையின் ஏனைய அரசியல் குடும்பங்களை விட ராஜபக்ச குடும்பம் எதிர்நோக்கியுள்ள சரிவு மிக ஆழமானதாகக் கருதப்படுகிறது.

இவை அனைத்தும் தனிநபர் எனும் மஹிந்த எனும் ஒருவரைப் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல. இலங்கை அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த “அதிகாரம் குடும்பத்திற்குள் தொடர வேண்டும்” என்ற அரசியல் மனோபாவத்தின் மீதான கேள்வியாகவும் இதைப் பார்க்க வேண்டும்.

அரசியல் என்பது ஒரு குடும்பத்தின் சொத்தல்ல. ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரமும், அரசியல் நிறுவனங்களும், மக்களின் எதிர்காலமும் எந்தவொரு குடும்பத்தின் பரம்பரை உரிமையாகவும் இருக்க முடியாது. மக்கள் வாக்களிப்பதன் மூலம் வழங்கும் அதிகாரம், மீண்டும் மக்களிடமே பொறுப்புடன் ஒப்படைக்கப்பட வேண்டிய பொதுச் சொத்தாகும்.

ஒரு தலைமுறை அரசியல்வாதி தனது அரசியல் அனுபவத்தை அடுத்த தலை முறைக்கு அறிவாக வழங்குவது வேறு; நாட்டின் அரசியல் அதிகாரத்தையே குடும்ப வாரிசுரிமையாக மாற்ற முயல்வது வேறு. இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை இலங்கை மக்கள் இன்று மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் அரசியல் வரலாற்றில் அவருக்கென தனித்த இடம் இருக்கலாம். ஆனால் அந்த வரலாற்றையும் அரசியல் மரியாதையையும் பயன்படுத்தி தனது மகனை அடுத்த தலைமுறைக்கான அதிகாரப் தலைமையாக அமைப்பது ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கங்களுடன் பொருந்துகிறதா என்பதே இன்று மக்கள் எழுப்பும் கேள்வியாகும்.

இறுதியில், நாட்டின் எதிர்காலத்தை ஒரு குடும்பத்தின் அரசியல் வாரிசுகள் தீர்மானிக்க வேண்டுமா, அல்லது மக்களே தங்களுடைய வாக்கின் மூலம் அந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமா என்பதே தற்போதைய இலங்கை அரசியலின் தீர்க்கமான உண்மையை நோக்கிய பயணமாக உள்ளது. 

எனவே, அநுராதபுரத்தில் கூடியவர்கள் யார்? எங்கிருந்து அழைத்து வரப்பட்டார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? — இதற்கான பதிலை நாட்டு மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

மதவாதமும் இனவாதமும் இன்றி, கடந்த இரண்டாண்டுகளாக அமைதியான சூழலில் சமத்துவமானதும் ஒருங்கிணைந்ததுமான இலங்கைக்கான புதிய அடித்தளத்தினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமைத்துள்ள நிலையில், மீண்டும் இன–மத முரண்பாடுகளைத் தூண்டி நாட்டை பழைய பேரினவாத அரசியல் பாதைக்குத் திருப்புவதே கூட்டத்தில் உரையாற்றியவர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்தியது.

மக்களால் நிராகரிக்கப்பட்டு அரசியல் முகவரியை இழந்த சக்திகள், தங்களின் பழைய ஆதரவாளர்களை மீண்டும் ஒன்றிணைத்து NPP அரசுக்கு எதிராக அரசியல் எழுச்சியை உருவாக்க முயற்சிக்கின்றன. ஆனால், இனத்தையும் மதத்தையும் கடந்து “இலங்கையர்” என்ற ஒரே அடையாளத்தின் கீழ் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் பாதையில் மக்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டார்கள்.

பழைய இனவாத அரசியலுக்குள் நாட்டை மீண்டும் இழுத்துச் செல்வது இனி அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை அன்றை தினம் தேசிய மக்கள் சக்தி நடாத்திய  பொலன்னறுவை கூட்டத்துக்கும், மறு நாள் அநுராதபுரத்தில் இடம் பெற்ற இரண்டு கூட்டங்களுக்கும் ஜனாதிபதி அநுரக குமார திசாநாயக்கவை பார்ப்பதற்காக  வருகை தந்திருந்த நாட்டை நேசிக்கும் மக்கள் அலை நிரூபித்துக்காட்டியது.

ஒரு நாடு உண்மையான முன்னேற்றத்தை அடைய வேண்டுமெனில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான ஊழல், இலஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். அரசியல் அதிகாரம் என்பது தனிப்பட்ட செல்வத்தையும் சலுகைகளையும் குவிப்பதற்கான கருவி அல்ல; அது மக்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் பொறுப்பும் சேவையுமாகும் என்பதை அரசியல் கலாசாரமாக மாற்ற வேண்டும்.

அதற்காக சட்டம், நீதித்துறை, பொலிஸ், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சிவில் நிர்வாகம் ஆகியவை எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுயாதீனமாக இயங்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாடே ஒரு ஜனநாயக நாட்டின் அடித்தளமாக இருக்க வேண்டும்.

இந்த மாற்றத்தையே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. பழைய அரசியல் கலாசாரத்தில் அதிகாரத்தை தனிப்பட்ட பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு இது இயல்பாகவே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், குடும்ப அரசியல், அதிகாரப் பேராசை, இனவாதம் மற்றும் மதவாத அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க முயலும் சில தரப்புகளின் அரசாங்க எதிர்ப்புப் பேரணிகள் இன்று மக்கள் மத்தியில் முன்னைய தாக்கத்தை இழந்து வருகின்றன. குறிப்பாக, புதிய அரசியல் விழிப்புணர்வுடன் எழுந்துள்ள இளைஞர்கள், வெறும் கோஷங்களையும் உண்மைக்கு புறம்பான அரசியல் பிரசாரங்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

மக்கள் இன்று கேட்பது ஒன்றே — அதிகாரம் யாருக்காக? பதவி எதற்காக? அரசியல் எதற்காக?
அதற்கான பதில் மிகத் தெளிவானது: அதிகாரம் - மக்களுக்காக; பதவி - பொறுப்புக்காக; அரசியல் - நாட்டின் எதிர்காலத்திற்காக.

இதுவே பழைய அரசியல் கலாசாரத்திலிருந்து ஜனாதிபதி தலைமையிலான NPP அரசாங்கத்தின் புதிய அரசியல் கலாசாரத்திற்கான மாற்றத்தின் அடையாளமாகும். ஊழலற்ற நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, சுயாதீன நிறுவனங்கள் மற்றும் மக்களை மையப்படுத்திய தூய்மையான அரசியல் பாதையில்தான் இலங்கையின் உண்மையான முன்னேற்றமும், சாத்தியமும் தங்கியுள்ளது.

ஒருகாலத்தில் நாட்டின் அரசியல் அதிகாரத்தை குடும்பத்தை மையப்படுத்திய சுரண்டல் அரசியல் கலாசாரமாகவும், பதவியும் அதிகாரமும் மக்களின் நம்பிக்கையை விட குடும்ப வாரிசுரிமையுடன் இணைத்திருந்தது. ஆனால் இன்று மக்கள் அரசியலை வேறொரு கோணத்தில் பார்க்கத் தொடங்கியுள்ளனர். 

அதிகாரம் என்பது பரம்பரைச் சொத்து அல்ல; அது மக்களால் வழங்கப்படும் தற்காலிகப் பொறுப்பு. இந்த மாற்றத்தின் பின்னணியிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரசியலை தனிப்பட்ட சலுகைகள் மற்றும் குடும்ப ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, மக்கள் சேவையை மையப்படுத்திய புதிய அரசியல் கலாசாரத்தை முன்னிறுத்துகிறது. 

தந்தை ஆட்சி செய்தார் என்பதற்காக மகனுக்கு அதிகாரம் தானாகக் கிடைக்காது; மக்களின் நம்பிக்கையையும் வாக்கையும் வென்றால்தான் எந்த அரசியல் வாரிசுக்கும் இடம் கிடைக்கும். எனவே, அநுராதபுர மேடை பழைய குடும்ப அரசியலின் மீள் பிரவேசத்திற்கான வாசலாக மாறுமா அல்லது மக்கள் ஏற்கனவே வழங்கிய நிராகரிப்பை மீண்டும் நினைவூட்டும் அரசியல் தருணமாக மாறுமா என்பதே இன்றைய முக்கியக் கேள்வியாகும்.

ஆகவே, மக்களால் தூக்கி எறியப்பட்ட குடும்ப அரசியலின் கடைசி முயற்சியா அநுராதபுரம்? என்ற கேள்வி வலுப்பெற்றுள்ளதோடு, ஒரு நாட்டின் அதிகாரம் தந்தையிடமிருந்து மகனுக்கு கைமாறும் குடும்பச் சொத்தல்ல! என்பதில் நாட்டு மக்கள் 2024ம் ஆண்டே முடிவெடுத்து விட்டார்கள் என்ற உண்மையை சிலர் ஏற்கொள்ள மறுப்பதை பார்க்கின்ற பொழுது, அழுவதா அல்லது சிரிப்பதா என்ற வேடிக்கையான விடயமாக உள்ளது.

அஹமட் இர்ஷாட்.
தினகரன் பத்திரிகைக்காக,
15-09-2026

බලය පාරම්පරික නොවේ; ජනතාව දුන් තාවකාලික වගකීමක්!
අනුරාධපුර රැස්වීම දේශපාලන පණිවිඩයක් දෙනවා.

අනුරාධපුරයට රැස්වූයේ කවුද? ඒවා ගෙනාවේ කොහෙන්ද? ඔවුන්ගේ අරමුණ කුමක්ද? මෙයට පිළිතුර රටේ ජනතාව පැහැදිලිව තේරුම් ගෙන ඇත.

අනුරාධපුර වේදිකාව පරණ පවුල් දේශපාලනයට යළි පිවිසීමේ දොරටුවක් වෙයිද? එසේත් නැතිනම් අද ප්‍රධාන ප්‍රශ්නය වන ඔවුන් දැනටමත් ලබා දී ඇති ප්‍රතික්ෂේප කිරීම සිහිපත් කරන දේශපාලන මොහොතක් බවට පත්වේද.

දේශපාලනයේ පවුල් බලයට ඇති ගිජුකම සහ වයසින් අඩු වයසින් විශ්‍රාම යෑමේ අයිතිය අහිමි කරමින් හිටපු නායකයන් අපහසුතාවයට පත් කරන පවුල් දේශපාලනය පිළිබඳව දේශීය හා ඩයස්පෝරා දේශපාලන ක්ෂේත්‍රයේ දැඩි විවේචන එල්ල වී තිබේ.
++++++++++++++++

නාමල් රාජපක්ෂ මහතා ඉස්මතු කරමින් අනුරාධපුරයේ පැවති පොදුජන පෙරමුණ රැස්වීමට මහින්ද රාජපක්ෂ මහතා සහභාගී වූ ආකාරය සම්බන්ධයෙන් දේශපාලන ක්ෂේත්‍රයේ විවිධ විවේචන සහ කනස්සල්ල මතුව තිබෙනවා. මහින්ද යුද්ධය අවසන් කළ නායකයකු ලෙස හඳුන්වයි. නමුත් පවතින දේශපාලන වටපිටාව තුළ පුතාගේ දේශපාලන අනාගතය, මහලු වියේදී පවා වේදිකාවට ගොඩවීම බොහෝ දෙනාගේ විවේචනයට ලක්ව තිබෙනවා.

පවුල් දේශපාලනය සහ ශ්‍රී ලංකා දේශපාලනයේ අනුප්‍රාප්තික උමතුව ජ්‍යෙෂ්ඨ නායකයින්ට විවේක ගැනීමේ අයිතිය කොල්ලකා ප්‍රසිද්ධියේ අපහසුතාවට පත් කරන ආකාරය පිළිබඳ සාක්ෂියක් ලෙස දේශපාලන විචාරකයෝ අනුරාධපුරයේ රැලිය දකිති.

එපමණක් නොව දේශපාලන බල තණ්හාව සහ තම පුත්‍රයා අනාගත දේශපාලනයේ ප්‍රධාන මුහුණුවර බවට පත් කර ගැනීමේ පවුල් දේශපාලන අභිලාෂය කොතෙක් දුරට ගෙන යා හැකි ද යන්න පිළිබඳව මහින්ද රාජපක්ෂ මහතා අනුරාධපුරයේ පැවති පොදුජන පෙරමුණ රැස්වීමට සහභාගී වීම කතා බහට ලක්ව තිබේ.

ඇමරිකාව, බැරැක් ඔබාමා, ජෝර්ජ් ඩබ්ලිව් වැනි ප්‍රජාතන්ත්‍රවාදී රටවල හිටපු ජනාධිපතිවරුන් වන බුෂ් සහ බිල් ක්ලින්ටන් ඔවුන්ගේ ධුර කාලයෙන් පසු බලයෙන් සම්පූර්ණයෙන්ම ඉවත් වී ගෞරවාන්විත විශ්‍රාම සහ සමාජ සේවයට නායකත්වය දී ඇත.

ශ්‍රී ලංකාව තුළ, විශේෂයෙන්ම රාජපක්ෂ පවුලේ බලය රඳවාගෙන එය ඊළඟ පරම්පරාවට ලබාදීමට ඇති උනන්දුව, හිටපු නායකයින්ගේ උරුමය සහ ගෞරවය ජනතාව අතරෙන් වියැකී ගොස් ඇති බව දේශපාලන නිරීක්ෂකයන්ගේ අදහසයි.

රටේ බහුතර ජනතාවක් ආදරය කරන නායකයෙකුට, පවුලේ දේශපාලන අභිලාෂයන් සහ කෑදරකමෙන් මිදී සිටින වයසක ප්‍රසිද්ධ වේදිකාවල පෙනී සිටීම ඔහුගේ අතීත ජයග්‍රහණ මත සෙවනැල්ලක් වන අතර පවුල් අනුප්‍රාප්තිය ශ්‍රී ලංකා දේශපාලනයේ කෙතරම් ගැඹුරට මුල් බැස තිබේද යන්න පිළිබඳව ප්‍රශ්න මතු කරයි.

මහින්ද රාජපක්ෂ මහතා නිසි කලට ජනතාව අතරේ තම බලපෑම පවත්වා ගෙන ගෞරවාන්විතව දේශපාලනයෙන් ඉවත් වූයේ නම් මේ තත්ත්වය මහින්ද රාජපක්ෂ මහතාට සිදු නොවනු ඇතැයි බොහෝ දෙනාගේ මතයයි.

එපමණක් නොව තම දේශපාලන උරුමය රැක ගැනීමට පුත්‍රයා දරණ උත්සාහය නිසා කලක් ජනප්‍රිය නායකයන්ගේ සාම්ප්‍රදායික දේශපාලන උරුමය තම දෑතින්ම කැළැල් වී ඇති බව දේශපාලන විචාරකයෝ පෙන්වා දෙති.

මීට අමතරව, අඛණ්ඩ දේශපාලන ව්‍යාපාර සහ ජනතාව අතර පවතින අතෘප්තිය හේතුවෙන් රාජපක්ෂ පවුල මුහුණ දී ඇති පරිහානිය ශ්‍රී ලංකාවේ අනෙකුත් දේශපාලන පවුල්වලට වඩා බෙහෙවින් ගැඹුරු බව සැලකේ.

මේ සියල්ල මහින්ද තනි පුද්ගලයකු ලෙස විවේචනය කිරීමක් පමණක් නොවේ. එය දශක ගණනාවක් තිස්සේ ශ්‍රී ලංකා දේශපාලනයේ පවතින “බලය පවුල තුළම පැවතිය යුතුය” යන දේශපාලන ආකල්පය පිළිබඳ ප්‍රශ්නයක් ලෙස ද සැලකිය යුතුය.

දේශපාලනය පවුලේ දේපළක් නොවේ. ජාතියක පාලන බලය, දේශපාලන ආයතන සහ එහි ජනතාවගේ අනාගතය කිසිම පවුලක පාරම්පරික අයිතියක් විය නොහැක. ජනතාවගේ ඡන්දයෙන් ලැබෙන බලය වගකීමෙන් යුතුව නැවත ජනතාව වෙත පැවරිය යුතු මහජන සම්පතකි.

දේශපාලකයන්ගේ එක පරම්පරාවක් තම දේශපාලන අත්දැකීම් ඊළඟ පරම්පරාවට දැනුම ලෙස ලබාදීම එක දෙයකි; රටේ දේශපාලන බලය පවුලේ බූදලයක් බවට පත් කිරීමට උත්සාහ කිරීම තවත් එකකි. මේ දෙකේ වෙනස අද ශ්‍රී ලාංකිකයන් ඉතා පැහැදිලිව තේරුම් ගැනීමට පටන් ගෙන ඇත.

මහින්ද රාජපක්ෂට ඔහුගේ දේශපාලන ඉතිහාසයේ සුවිශේෂී ස්ථානයක් හිමි විය හැකිය. එහෙත් අද ජනතාව අසන ප්‍රශ්නය වන්නේ එම ඉතිහාසයත් දේශපාලන ගෞරවයත් යොදා ගනිමින් තම පුත්‍රයා ඊළඟ පරම්පරාවේ බලයේ ප්‍රධානියා බවට පත් කිරීම ප්‍රජාතන්ත්‍රවාදයේ මූලික අරමුණු සමඟ ගැළපෙනවාද යන්නයි.

අවසාන වශයෙන්, වත්මන් ශ්‍රී ලාංකේය දේශපාලනයේ තීරණාත්මක සත්‍යය කරා යන ගමන වන්නේ රටේ අනාගතය තීරණය කළ යුත්තේ පවුලක දේශපාලන උරුමක්කාරයන් ද, එසේත් නැතිනම් ජනතාවම තම ඡන්දයෙන් එම අනාගතය තීරණය කළ යුතු ද යන්නයි.

එසේනම් අනුරාධපුරයට රැස්වූයේ කවුද? ඒවා ගෙනාවේ කොහෙන්ද? ඔවුන්ගේ අරමුණ කුමක්ද? - මෙයට පිළිතුර රටේ ජනතාව පැහැදිලිව තේරුම් ගෙන ඇත.

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජනතා බලවේගය පසුගිය දෙවසර තුළ ජාතිවාදයෙන් හා ජාතිවාදයෙන් තොර සමවාදී ඒකාග්‍ර ශ්‍රී ලංකාවක් සඳහා නව අඩිතාලමක් දමා ඇති අතර වාර්ගික - ආගමික ගැටුම් අවුස්සමින් පැරණි ස්වෝත්තමවාදී දේශපාලන මාවතට රට යළි ගෙන ඒමේ අභිලාෂය එම රැස්වීම ඇමතූ අයගේ කතාවෙන් ප්‍රකාශ විය.

ජනතාව විසින් ප්‍රතික්ෂේප කරන ලද සහ ඔවුන්ගේ දේශපාලන ලිපිනය අහිමිව සිටින බලවේග තම පැරණි ආධාරකරුවන් නැවත එකතු කර NPP රජයට එරෙහිව දේශපාලන නැගිටීමක් ගොඩනැගීමට උත්සාහ කරයි. එහෙත් ජාතිය ආගම ඉක්මවා “ශ්‍රී ලාංකේය” යන තනි අනන්‍යතාවය යටතේ නව දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කිරීමේ මාවතේ ජනතාව දැනටමත් ඉදිරියට ගොස් ඇත.

එදා ජාතික ජන බලවේගය සංවිධානය කළ පොළොන්නරුව රැස්වීමට සහ පසුදා අනුරාධපුරයේ පැවැති රැස්වීම් දෙකේදී අනුරාග කුමාර දිසානායක ජනාධිපතිවරයා බැලීමට පැමිණි රටට ආදරය කරන ජන රැල්ලෙන් පෙන්නුම් කරන්නේ යළිත් පැරණි ජාතිවාදී දේශපාලනයට රට ඇද දැමීම තවදුරටත් පහසු කාර්යයක් නොවන බවයි.

රටක් සැබෑ ප්‍රගතියක් අත්කර ගැනීමට අවශ්‍ය නම් දේශපාලන බලය යොදා ගනිමින් සිදුවන සියලු ආකාරයේ දූෂණ, අල්ලස් සහ බලය අයුතු ලෙස භාවිත කිරීම සම්පූර්ණයෙන්ම නැවැත්විය යුතුය. දේශපාලන බලය යනු පුද්ගලික ධනය සහ වරප්‍රසාද රැස්කර ගැනීමේ මෙවලමක් නොවේ; එය පිළිගත් වගකීමක් සහ ජනතා සේවයක් බවට දේශපාලන සංස්කෘතියක් බවට පත් කළ යුතුයි.

ඒ සඳහා නීතිය, අධිකරණය, පොලිසිය, ස්වාධීන කොමිෂන් සභා, සිවිල් පරිපාලනය දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව ස්වාධීනව කටයුතු කළ යුතුයි. නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමානය යන මූලධර්මය ප්‍රජාතන්ත්‍රවාදී රටක පදනම විය යුතුය.

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය (NPP) ආණ්ඩුව බලයට පත් වූ දිනයේ සිට ක්‍රමක්‍රමයෙන් ක්‍රියාත්මක කරන්නේ එම වෙනසයි. පැරැණි දේශපාලන සංස්කෘතිය තුළ බලය පුද්ගලික ආරක්ෂක පලිහක් ලෙස භාවිත කළ පිරිසට මෙය නිරායාසයෙන්ම බියක් ඇති කළේය.

ඒ නිසා පවුල් දේශපාලනය, බල තණ්හාව, කුලවාදය, ආගම්වාදී දේශපාලනය යලි පණ ගැන්වීමට උත්සාහ කරන ඇතැම් කල්ලිවල ආණ්ඩු විරෝධී රැලි අද ජනතාව අතර පෙර තිබූ බලපෑම ගිලිහී යමින් තිබේ. විශේෂයෙන්ම නව දේශපාලන දැනුවත්භාවයෙන් අවදි වී සිටින තරුණ පරපුර හුදු සටන් පාඨ සහ අසත්‍ය දේශපාලන ව්‍යාපාර පිළිගැනීමට සූදානම් නැත.

අද ජනතාව ඉල්ලන්නේ එක දෙයයි - බලය කාටද? තනතුර කුමක් සඳහාද? දේශපාලනය කුමක් සඳහාද?
පිළිතුර ඉතා පැහැදිලිය: බලය - ජනතාව සඳහා; තනතුර - වගකීම සඳහා; දේශපාලනය - රටේ අනාගතය වෙනුවෙන්.

මෙය ජනාධිපතිවරයා ප්‍රමුඛ NPP ආණ්ඩුවේ පැරණි දේශපාලන සංස්කෘතියේ සිට නව දේශපාලන සංස්කෘතියට සංක්‍රමණය වීම සංකේතවත් කරයි. ශ්‍රී ලංකාවේ සැබෑ ප්‍රගතිය සහ විභවය රැඳී ඇත්තේ දූෂණයෙන් තොර පාලනය, නීතියේ ආධිපත්‍යය, ස්වාධීන ආයතන සහ ජනතාව කේන්ද්‍ර කරගත් පිරිසිදු දේශපාලන මාවතක ය.

රටේ දේශපාලන බලය යනු වරෙක පවුල කේන්ද්‍ර කරගත් සූරාකෑමේ දේශපාලන සංස්කෘතියක් වූ අතර එහිදී තනතුර සහ බලය ජනතාවගේ විශ්වාසයට වඩා පවුලේ අනුප්‍රාප්තිය සමඟ සම්බන්ධ විය. නමුත් අද ජනතාව දේශපාලනය දෙස බලන්නට පටන්ගෙන තිබෙන්නේ වෙනත් කෝණයකින්. 

බලය යනු උරුම වූ දේපලක් නොවේ; එය ජනතාව ලබාදුන් තාවකාලික වගකීමකි. දේශපාලනය පුද්ගලික වරප්‍රසාදවලින් සහ පවුල් ආධිපත්‍යයෙන් මිදී රාජ්‍ය සේවය කේන්ද්‍ර කරගත් නව දේශපාලන සංස්කෘතියක් ජාතික ජන බලවේගය රජය ප්‍රක්ෂේපණය කරන්නේ මේ වෙනස පසුබිම් කරගෙනය.

පියා පාලනය කළ නිසා පුතාට ඉබේම බලය උරුම නොවේ; ඕනෑම දේශපාලන අනුප්‍රාප්තිකයෙකුට තැනක් හිමිවන්නේ ඔහු ජනතාවගේ විශ්වාසය හා ඡන්දය දිනුවහොත් පමණි. එසේ නම්, අනුරාධපුර වේදිකාව පැරණි පවුල් දේශපාලනයේ නැවත පිවිසීමේ දොරටුවක් බවට පත්වේද නැතිනම් ඔවුන් දැනටමත් ලබාදී ඇති ප්‍රතික්‍ෂේප කිරීම ජනතාවට මතක් කර දෙන දේශපාලන මොහොතක් බවට පත්වේවිද යන්න අද ප්‍රධාන ප්‍රශ්නයයි.

එසේනම් ජනතාව විසින් ඉවත දමන පවුල් දේශපාලනයේ අවසාන ස්ථානය අනුරාධපුරයද? ප්‍රශ්නය ප්‍රබල වී ඇති අතර රටක බලය යනු පියාගෙන් පුතාට යන පවුල් උරුමයක් නොවේ! 2024 රටේ ජනතාව දැනටමත් තීරණය කර අවසන් බව ඇතැමුන් පිළිගැනීම ප්‍රතික්ෂේප කරන අයුරු දකින විට අඬන්නද හිනාවෙන්නද යන්න විහිළුවකි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
15-09-2026.
සිංහල පරිවර්තනය සමග).அதிகாரம் பரம்பரைச் சொத்தல்ல; மக்களால் தரப்படும் தற்காலிகப் பொறுப்பு! அநுராதபுரக் கூட்டம் உணர்த்தும் அரசியல் செய்தி. Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.