Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேச செயலகங்களின் உண்மையான நிர்வாகச் சுதந்திரமும், NPP ஆட்சியில் மக்களின் திருப்தியும்.


සිංහල පරිවර්තනය සමග) ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேச செயலகங்களின் உண்மையான நிர்வாகச் சுதந்திரமும், NPP ஆட்சியில் மக்களின் திருப்தியும்.


கல்குடா தொகுதியின் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்களில் சொந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அரசியல் அழுத்தங்களற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டுச் சுயாதீனமாகச் செயற்படும் வெளிப்படையான நிர்வாகச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கியமான இரு பிரதேசங்களாக கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி), கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலகங்கள் அமைந்துள்ளன. 


ஒரே வீதியால் பிரிக்கப்பட்டுள்ள இவ்விரு பிரதேச எல்லைகளுக்குள் வாழும் மக்கள் கல்வி, கலாச்சாரம், வியாபாரம், திருமணம் உள்ளிட்ட பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஒன்றிணைந்த சமூகமாகவே வாழ்ந்து வருகின்றன.


இத்தகைய சமூகப் பின்னணியைக் கொண்ட இப்பிரதேசங்களில், இலங்கை நிர்வாக சேவையில் (SLAS) தகைமை பெற்ற உள்ளூர் அதிகாரிகள் இருந்தும், தமது சொந்தப் பிரதேசங்களிலேயே பிரதேச செயலாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்பு கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்ததாகப் பிரதேச மக்களிடையே நீண்டகாலமாகக் வேதனை தெரிவித்து வந்தனர்.


அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய அரசியல்வாதிகள், உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தமது அரசியல் தலையீடுகளுக்கும் கட்டளைகளுக்கும் இணங்காமல் செயற்படக்கூடும் என்ற அச்சத்தினால், வெளியூர்களைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிகாரிகளை இப்பிரதேசங்களில் நியமிக்க முயன்றதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 


இதனால், உள்ளூர் நிர்வாகத்தில் தகுதியும் அனுபவமும் கொண்ட அதிகாரிகள் பணியாற்ற முடியாமல் ஓரங்கட்டப்பட்டதாக புத்திஜீவிகள் மற்றும் நடுநிலையான சிந்தனையாளர்கள் மத்தியில் ஏமாற்றமும், கலையும் நிலவியது.


காத்தான்குடி, ஏறாவூர், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிகாரிகள் இப்பிரதேச செயலகங்களில் பணியாற்றியமை தொடர்பாகவும் உள்ளூர் மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.



இந்தப் பின்னணியில்தான், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்களில் உள்ளூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நிர்வாக அதிகாரிகள் கடமையாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை, கல்குடா முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால எதிர்பார்ப்புக்கும், கவலைக்கும் கிடைத்த விமோசனமாக இதைக் கருத முடியும்.


அந்த வகையில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ. தாஹிர் (SLAS) பிரதேச செயலாளராகவும், உதவிச் செயலாளராக அதே பிரதேசத்தை சேர்ந்த எச்.எம்.எம். பாரூக் (SLAS)  ஆகியோர்கள் கடமையாற்றி வருகின்றனர். 


அதேபோன்று, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.பி.எம். முபாறக் (SLAS) பிரதேச செயலாளராகப் பணியாற்றி வருகின்றார்.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியல் கலாச்சாரத்தில், திறமை, அனுபவம் மற்றும் நேர்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்நியமனங்களுடன் இணைந்துள்ளது. 


அரசியல் தலையீடுகளுக்கு அப்பால், உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த நிர்வாக அதிகாரிகள் அவற்றுக்குத் தெளிவான தீர்வுகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் பிரதேச மக்களிடையே உருவாகியுள்ளது.


எனினும், இம்மாற்றத்தின் உண்மையான பெறுமதி உள்ளூர் அதிகாரிகளின் நியமனத்துடன் மட்டும் முடிவடையக் கூடாது. 


அரசியல் தலையீடுகளற்ற நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கான நடைமுறைத் தீர்வுகள் ஆகியவற்றின் ஊடாகவே அது நிரூபிக்கப்பட வேண்டும்.



மேலும், கல்குடா மக்களின் எதிர்பார்ப்பு என்பது, சொந்த ஊரைச் சேர்ந்த அதிகாரிகள் பிரதேசத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்ற வேண்டும் என்பதுடன் மட்டும் முடிவடைவதில்லை. அந்த அதிகாரிகள் தமது மண்ணின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் முன்னிறுத்தும் அர்ப்பணிப்புமிக்க மக்கள் சேவையாளர்களாகச் செயற்பட வேண்டும் என்பதே உண்மையான எதிர்பார்ப்பாகும்.



ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் மக்கள் மைய நிர்வாக அணுகுமுறையின் அடிப்படையில், அரச அதிகாரம் என்பது மக்களுக்கான சேவையை வழங்கும் பொறுப்பாகவே அமைய வேண்டும். அரச அலுவலகங்கள் மக்களை அலைக்கழிக்கும் இடங்களாக அல்லாமல், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நம்பிக்கையான சேவை மையங்களாகவும் மாற வேண்டும்.


கல்குடா பிரதேசத்தின் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கான அரச சேவைகளைத் துரிதமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் வழங்குவது அவசியமாகின்றது.


அரச நலத்திட்டங்கள் உரிய மக்களைச் சென்றடைவதும், அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதும் முக்கியமானதாகும்.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் கலாசாரம் என்பது, பதவியையும் அதிகாரத்தையும் தனிப்பட்ட செல்வாக்குக்கான கருவியாகப் பயன்படுத்தாமல், மக்களின் நலனுக்கான பொறுப்பாகக் செயற்படுத்துவதாகும்.


சொந்த மண்ணைச் சேர்ந்த அதிகாரிகளின் அனுபவமும், மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்திருக்கும் புரிதலும், பொறுப்புணர்வும் ஒன்றிணையும்போது, கல்குடாவின் அபிவிருத்திப் பயணம் மக்களின் பங்களிப்புடன் மேலும் வலுப்பெற முடியும் என்பது மக்கள் பார்வையாக உள்ளது.


கல்குடா பிரதேச மக்கள் விரும்புவது அதிகாரிகளின் ஊர்சார் அடையாளத்தை மட்டும் அல்ல. மாறாக, மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, அவர்களின் உரிமைகளை மதித்து, சமத்துவமான சேவையை வழங்கும் பொறுப்புள்ள நிர்வாகத்தையும், சேவையை திருப்தியுடன் பெற்றுக்கொண்ட மக்கள்  மன நிம்மதியுடன் வீடு திரும்புவதையுமே.


அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் அமைந்துள்ள ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் வழிநடத்திச் செல்லும் சொந்த ஊர்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் இருவரும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வலுவூட்டல் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் மிகப் பெரும் திட்டமாக இருக்கின்ற “பிரஜா சக்தி” திட்டத்தைத் திறம்படச் செயற்படுத்தி வருகின்ற அரச நிருவாகத் தலைவர்கள் என்ற நற்பெயரையும் கொண்டுள்ளார்கள்


அரசாங்கத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயற்படுபவர்களாக இவர்கள் இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் பரவலாகப் பேசப்படுவதுடன், பொதுமக்கள் மத்தியிலும் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காத நிர்வாக அதிகாரிகளாகப் பிரதேச செயலகங்களை வழிநடத்திச் செல்கின்றனர் என்ற கருத்தும் நிலவுகின்றது.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருட காலத்திற்குள், இந்த இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மாவட்ட செயலகத்தின் ஊடாக வீதி அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, நீர்ப்பாசனம், குளங்களைப் புனரமைத்தல், விவசாயிகளுக்கான நட்டஈடு, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு மற்றும் மின்சார இணைப்புகளை வழங்குதல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக மில்லியன் கணக்கான ரூபாய்கள் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


கிழக்கு மாகாண சபையின் ஊடாக உள்ளூர் வீதிகளைப் புனரமைத்தல், புதிய வீதிகளை அமைத்தல், கல்வி, கலாசாரம் மற்றும் விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.


இதனுடன் முதியோர்களுக்கான கொடுப்பனவுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள், காசநோயாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவாக 7,500 ரூபாய், தலசீமியா நோயாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவாக 5,000 ரூபாய், நோயாளிகளைப் பராமரிப்பதற்கான மாதாந்தக் கொடுப்பனவாக 7,500 ரூபாய் என்பனவும் வழங்கப்படுகின்றன. 

மேலும்,
புற்றுநோயாளிகளைப் பராமரிப்பதற்கான உதவித்திட்டத்தின் கீழ் நான்கு நிலைகளில் உள்ள நோயாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகளாக 3,000 மற்றும் 5,000 ரூபாய் வழங்கப்படுகின்றன. 


கடந்தகால அரசாங்கங்களின் நிர்வாக நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உரிய பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான தகவல்கள் துல்லியமாகத் திரட்டப்பட்டு, அவர்களுக்கு உரிய நன்மைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்களுடன் தெரிவிக்கப்படுகின்றது. 


சுயதொழில் செய்பவர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான உதவிகள், விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள், சமுர்த்திப் பயனாளிகளுக்கான உதவிகள், சமுர்த்தி ஊடான வீட்டுத்திட்டங்கள், சமுர்த்தி வங்கிகளின் ஊடாகக் கடன் வழங்குதல் மற்றும் வீடுகளைத் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு சமூகநலத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இருதய சத்திரசிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கும், சிகிச்சை நிலையங்களுக்குச் செல்லும் நோயாளிகளுக்கான பயணச் செலவுகளுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன. 


மாதாந்தம் வெற்றிகரமாக இடம் பெறுகின்ற நடமாடும் சேவைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் என்பவைகளோடு சமூக பாதுகாப்பு நிதியத்திலும் விஷேட அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.


இதற்கு முன்னர் காணப்படாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இத்தகைய சேவைகள் நேர்த்தியாக முன்னெடுக்கப்படுவதாகவும், உரிய பயனாளிகளுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் நிர்வாக ரீதியான கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மிக முக்கியமாக, கடந்த காலங்களில் பிரதேசத்தில் நிலவிய போதைப்பொருள் விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பொலிஸார் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாக சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கான சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு தண்டனை மட்டுமன்றி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்கி சமூகத்துடன் மீண்டும் இணைக்கும் நோக்கில் புணர்வாழ்வு நிலையமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.


மேலும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் ஏற்பாட்டில், மாவட்டத்திற்கு முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அழைக்கப்பட்டு, பிரதேச செயலக மட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.


அவற்றுக்கான தீர்வுகளை மத்திய அரசாங்கத்தின் ஊடாகவும் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு சென்றும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


 இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் பிரதேசங்களின் தேவைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து இரண்டு பிரதேச செயலாளர்களும் தங்களது திருப்தியை வெளியிடுகின்றனர்.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துவரும் ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தின் கீழ், நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் தமது பிரதேச செயலகங்களின் நிர்வாகச் சூழலில் எவ்வாறான நன்மைகளையும், வெளிப்படைத் தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பிலும் அதிகாரிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.


இவ்வாறாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படும் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்களின் தேவைகளை முன்னிறுத்திய மக்கள் சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளன. 


சொந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று, அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், பிரதேசத்தின் குறைபாடுகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் அக்கறையுடன் செயற்படுவது கல்குடா மக்களின் எதிர்பார்ப்புகளுடன் இணைந்த ஒரு முக்கியமான நிர்வாக எதிர்பார்பாகவும், அவ்வாறான எதிர்பார்ப்பிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தீர்வினை பெற்றுக்கொண்ட சமூகமாகவும் ஓட்டமாவடி வாழைச்சேனை சமூகம் நிம்மதியான பெருமூச்சு விடுகின்றது.


ஆகவே, கல்குடாவின் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச மக்களின் எதிர்பார்ப்பு, ஒரு அதிகாரி சொந்த ஊரைச் சேர்ந்தவரா அல்லது வெளியூரைச் சேர்ந்தவரா என்பதில் அல்ல; அவர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல், சட்டம் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கு அமைவாக, மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் முன்னிறுத்தி நேர்மையுடனும் பாரபட்சமின்றியும் சேவையாற்றுகிறாரா என்பதிலேயே உள்ளது. 

கடந்த காலங்களில் காணப்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளுக்கு இடமளிக்காமல், அரச அதிகாரிகளின் சுயாதீனத்தையும் மக்கள் சேவையின் தரத்தையும் பாதுகாப்பது நல்லாட்சியின் முக்கிய அடிப்படையாகும். 


இவ்வாறான பொறுப்புணர்வுடனும் சுயாதீனத்துடனும் செயற்படும் பிரதேச செயலாளர்களின் நிர்வாக அணுகுமுறை, பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகவும் அமையும். 


எனவே, அரச அதிகாரிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, அரசியல் தலையீடுகளற்ற, பொறுப்பான மற்றும் மக்கள் மைய நிர்வாகத்தை முன்னெடுப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நல்லாட்சி அணுகுமுறைக்கு வலுவான அடித்தளமாக அமைவதுடன், கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேசங்களின் நிலையான அபிவிருத்திக்கும் மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

அஹமட் இர்ஷாட்.
27-09-2026.

ඔට්ටමාවාඩි-වාසායිචේනයි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසවල සැබෑ පරිපාලන ස්වාධීනත්වය, 
NPP පාලනය ගැන ජනතාවගේ තෘප්තිය.

කල්කටා මැතිවරණ කොට්ඨාශයේ ඔඩ්ඩමාවාඩි සහ වසායිචේනයි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශවල ස්වදේශිකයන් නිලධාරීන් ලෙස පත් කර ජනතා අපේක්ෂාවන් ඉටුකර තිබේ.

ජාතික ජනබල රජය යටතේ දේශපාලන බලපෑම්වලින් තොර, නීති රීති තුළ ස්වාධීනව කටයුතු කරන විනිවිද පෙනෙන පරිපාලන පරිසරයක් නිර්මාණය වී තිබේ.
+++++++++++++++++

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ කල්කටා මැතිවරණ කොට්ඨාශයේ, කෝරළයිපත්තුව බටහිර (ඔඩ්ඩමාවඩි) සහ කෝරළෙයිපත්තු මඩි (බානචේනයි) ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශය මුස්ලිම්වරුන් බහුලව වෙසෙන වැදගත් ප්‍රදේශ දෙකකි. එකම මාර්ගයකින් වෙන්වී ඇති මෙම ප්‍රදේශ දෙකේ මායිම් තුළ ජීවත්වන ජනතාව අධ්‍යාපනය, සංස්කෘතිය, ව්‍යාපාර, විවාහය ඇතුළු විවිධ සමාජ ක්‍රියාකාරකම්වල නියැලෙමින් එකමුතු ප්‍රජාවක් ලෙස ජීවත් වෙති.

මෙවන් සමාජ පසුබිමක් සහිත මෙම කලාපවල ශ්‍රී ලංකා පරිපාලන සේවයේ (SLAS) සුදුසුකම් ලැබූ ප්‍රාදේශීය නිලධාරීන්ට තම තමන්ගේ ප්‍රදේශයන්හි ප්‍රාදේශීය ලේකම්වරුන් ලෙස සේවය කිරීමට පසුගිය කාලය තුළ අවස්ථාව අහිමි විය.

දේශපාලන බලය රඳවා ගැනීමට අවශ්‍ය දේශපාලනඥයන් මෙම ප්‍රදේශවලට විදේශීය සම්භවයක් ඇති නිලධාරීන් පත් කිරීමට උත්සාහ කළේ දේශීය පරිපාලන නිලධාරීන් තම දේශපාලන මැදිහත්වීම් සහ නියෝගවලට අවනත නොවනු ඇතැයි යන බියෙන් බවටද විවේචන එල්ල වී තිබේ. මේ නිසා දක්ෂ හා පළපුරුදු නිලධාරීන්ට ප්‍රාදේශීය පරිපාලනයේ වැඩ කිරීමට නොහැකි බවට බුද්ධිමතුන් හා මධ්‍යස්ථ චින්තකයින් අතර කලකිරීමක් හා කලාවක් ඇති විය.

මෙම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලවල කාතන්කුඩි, එබ්‍රාවුර්, ත්‍රිකුණාමලය සහ අම්පාර දිස්ත්‍රික්කවල නිලධාරීන් සේවය කිරීම සම්බන්ධයෙන් ප්‍රදේශවාසීන් අතර විවිධ මත පළ විය.

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජන බලවේග රජය යටතේ ඔටමාවාඩි සහ වසායිචේනයි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසවල සේවය කිරීමට ප්‍රාදේශීය සම්භවයක් ඇති පරිපාලන නිලධාරීන්ට අවස්ථාව සැලසීම කල්කටා මුස්ලිම් ප්‍රජාවගේ දිගුකාලීන අපේක්ෂාව සහ කනස්සල්ලට සහනයක් ලෙස සැලකිය හැක්කේ මේ පසුබිම තුළය.

ඒ ආකාරයට බටහිර කෝරළෙයිපත්තු ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ ඔඩ්ඩමාවඩි ප්‍රදේශයේ උපන් ඒ. ඒ තාහීර් (SLAS) ප්‍රාදේශීය ලේකම් ලෙස සහ HMM ෆාරුක් (SLAS) සහකාර ලේකම් ලෙස එම කොට්ඨාසයේම. එසේම වාසාලිචේන ප්‍රදේශයේ එම්.පී.එම්. මුබාරක් (SLAS) කෝරළයිපත්තු මඩි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ ප්‍රාදේශීය ලේකම් ලෙස කටයුතු කරයි.

ජාතික ජන බලවේගයේ නව දේශපාලන සංස්කෘතිය තුළ දක්‍ෂතාව, පළපුරුද්ද සහ අවංකභාවයට ප්‍රමුඛත්වය දෙනු ඇතැයි යන අපේක්ෂාව මෙම පත්වීම් සමඟ සම්බන්ධ වී තිබේ. දේශපාලන මැදිහත්වීම්වලට අමතරව ප්‍රදේශයේ ජනතාවගේ ගැටලුවලට හුරුපුරුදු පරිපාලන නිලධාරීන් ඒවාට පැහැදිළි විසඳුම් ලබාදීමට වැඩි ඉඩක් ඇති බවට ප්‍රදේශයේ ජනතාව තුළ විශ්වාසයක් පවතී.

කෙසේ වෙතත්, මෙම වෙනසේ සැබෑ වටිනාකම ප්‍රාදේශීය නිලධාරීන් පත් කිරීමෙන් අවසන් නොවිය යුතුය. දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් තොර, විනිවිදභාවයෙන්, වගවීමකින් සහ ජනතා ගැටලුවලට ප්‍රායෝගික විසඳුම්වලින් තොර පාලනයක් තුළින් එය ප්‍රදර්ශනය කළ යුතුය.

එපමණක් නොව, කල්කටාවේ ජනතාවගේ අපේක්ෂාව ස්වදේශික නිලධාරීන් විසින් භූමියේ පරිපාලන වගකීම්වල සේවය කිරීමත් සමඟ අවසන් නොවේ. සැබෑ අපේක්ෂාව වන්නේ එම නිලධාරීන් තම ඉඩමේ සමාජ, ආර්ථික, අධ්‍යාපනික සහ ජීවනෝපාය ගැටලු පිළිබඳව ගැඹුරු අවබෝධයක් ලබාගෙන ජනතා අයිතීන් හා අවශ්‍යතා වෙනුවෙන් කැප වූ රාජ්‍ය සේවකයන් ලෙස කටයුතු කිරීමය.

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුවේ ජනතා කේන්ද්‍රීය පාලන ප්‍රවේශය මත පදනම්ව ජනතාවට සේවා සැපයීමේ වගකීම රජයට පැවරිය යුතුය. රජයේ කාර්යාල මිනිසුන් ගැවසෙන ස්ථාන නොව ඔවුන්ගේ ගැටලු විසඳා ගත හැකි විශ්වාසනීය සේවා මධ්‍යස්ථාන විය යුතුය.

කල්කටා ප්‍රදේශයේ ගොවියන්, ධීවරයන්, කම්කරුවන්, කුඩා වෙළෙඳුන්, තරුණයන්, කාන්තාවන් සහ අඩු ආදායම්ලාභී පවුල්වල අවශ්‍යතා හඳුනාගෙන ඔවුන්ට කඩිනමින් සහ විනිවිදභාවයෙන් රජයේ සේවාවන් සැපයීම අවශ්‍ය වේ.

රජයේ සුබසාධන වැඩසටහන් නිවැරදි පුද්ගලයන් අතරට යාම සහ ජනතාවගේ සැබෑ අවශ්‍යතා මත සංවර්ධන වැඩසටහන් සිදු කිරීම වැදගත්.

ජාතික ජනබල ආණ්ඩුව යටතේ බලාපොරොත්තු වන නව දේශපාලන සංස්කෘතිය වන්නේ තනතුරු බලය පුද්ගලික බලපෑම් සඳහා යොදා නොගෙන ජනතා සුබසිද්ධිය වෙනුවෙන් වගකීමෙන් කටයුතු කිරීමයි.

නිජබිමෙන් පැමිණි නිලධාරීන්ගේ අත්දැකීම් සහ ජනතා ගැටලු පිළිබඳ අවබෝධය සහ වගකීම එක් වූ විට ජනතා සහභාගීත්වයෙන් ඛල්කුඩා සංවර්ධන ගමන තවත් ශක්තිමත් කළ හැකි බව ජනතා මතයයි.

Khalkudha ප්‍රදේශයේ ජනතාවට අවශ්‍ය වන්නේ නිලධාරීන්ගේ Ursar අනන්‍යතාවය පමණක් නොවේ. ඒ වෙනුවට ජනතා හඬට කන් දෙන, ඔවුන්ගේ අයිතීන්ට ගරු කරන, සාධාරණ සේවාවක් සපයන වගකිවයුතු පරිපාලනය, සේවාව ලබාගෙන ජනතාව සැනසීමෙන් නිවෙස් කරා පැමිණේ.

ඒ ආකාරයට ජාතික ජනතා බලගැන්වීමේ රජයේ ග්‍රාමීය බලගැන්වීමේ අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක දැවැන්තම ව්‍යාපෘතිය වන "ප්‍රජා ශක්ති" ව්‍යාපෘතිය ඵලදායි ලෙස ක්‍රියාත්මක කරන රජයේ පරිපාලනයේ ප්‍රමුඛයන් ලෙස මඩකලපුව දිස්ත්‍රික්කයේ කල්කටා බලකොටුවේ පිහිටි ඔට්ටමාවාඩි සහ වසායිචේන ප්‍රාදේශිය ලේකම් කාර්යාල දෙකට නායකත්වය දෙන ප්‍රාදේශිය ලේකම්වරුන් තම ගම්බිම් වල සිට ඇත.

ආණ්ඩුවේ සැබෑ අරමුණ තේරුම් ගෙන ඒ අනුව කටයුතු කරන්නේ ඔවුන් බව නිලධාරි මට්ටමින් විශාල වශයෙන් කතාබහට ලක්වන අතර චෝදනාවලට ඉඩක් නොතබන පරිපාලන නිලධාරීන් ලෙස ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල මෙහෙයවන බවටද ජනතාව අතර මතයක් පවතී.

ජාතික ජන බලවේගය රජය භාරගෙන වසර දෙකක් ඇතුළත මාර්ග සංවර්ධනය, අධ්‍යාපන සංවර්ධනය, වාරිමාර්ග, පොකුණු ප්‍රතිසංස්කරණය, ගොවීන්ට වගා වන්දි, ආපදාවට ලක්වූවන්ට වන්දි, විදුලි සම්බන්ධතා ලබාදීම වැනි විවිධ අවශ්‍යතා සඳහා දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය හරහා රුපියල් මිලියන ගණනින් මෙම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල දෙකට වෙන් කර ඇත.

නැඟෙනහිර පළාත් සභාව හරහා ප්‍රාදේශීය මාර්ග ප්‍රතිසංස්කරණය, නව මාර්ග ඉදිකිරීම, අධ්‍යාපන, සංස්කෘතික හා ක්‍රීඩා ක්ෂේත්‍ර සංවර්ධනය වැනි කටයුතු ද සිදු කෙරේ. මීට අමතරව, වැඩිහිටි දීමනා, ආබාධිත දීමනා, ක්ෂය රෝගීන් සඳහා රුපියල් 7,500 ක මාසික දීමනාවක්, තැලසීමියා රෝගීන් සඳහා රුපියල් 5,000 ක මාසික දීමනාවක් සහ රෝගී සත්කාර සඳහා රුපියල් 7,500 ක මාසික දීමනාවක් ද ලබා දේ.

එසේම පිළිකා රෝගීන් සඳහා වන සත්කාර ආධාර යෝජනා ක්‍රමය යටතේ රෝගීන් සඳහා රුපියල් 3000 සහ 5000 මාසික දීමනාව අදියර හතරක් යටතේ ලබා දේ. පසුගිය රජයන්හි පරිපාලන භාවිතයන්ට සාපේක්ෂව වත්මන් රජය යටතේ නිසි ප්‍රතිලාභීන් හඳුනාගැනීම සඳහා නිවැරදිව තොරතුරු එක්රැස් කර ඔවුන්ට නිසි ප්‍රතිලාභ ලබාදීමට සංඛ්‍යාලේඛන සහිතව කටයුතු කරමින් පවතී. 

ස්වයං රැකියාලාභීන් සඳහා දිරි දීමනා, කාන්තා මූලික නිවාස සඳහා ආධාර, විශේෂ අවශ්‍යතා සඳහා දීමනා, සමෘද්ධි ප්‍රතිලාභීන් සඳහා ආධාර, සමෘද්ධි නිවාස යෝජනා ක්‍රම හරහා සමෘද්ධි, සමෘති බැංකු හරහා ණය දීම, නිවාස අලුත්වැඩියා දීමනා වැනි විවිධ සමාජ සුබසාධන යෝජනා ක්‍රම ද ක්‍රියාත්මක වේ.

එමෙන්ම 2025 සහ 2026 වසර වලදී ජනාධිපති අරමුදල හරහා හෘද සැත්කම් සහ වකුගඩු බද්ධ කිරීමේ ශල්‍යකර්මවලට භාජනය වන ප්‍රතිලාභීන්ට ආධාර සහ ප්‍රතිකාර මධ්‍යස්ථාන වෙත පැමිණෙන රෝගීන් සඳහා ගමන් වියදම් ද ලබා දෙනවා.

සෑම මසකම ජංගම සේවා සහ ආයුර්වේද වෛද්‍ය කඳවුරු සාර්ථකව ස්ථානගත කිරීමත් සමඟ සමාජ ආරක්ෂණ අරමුදලේ විශේෂ පිළිගැනීමක් ද ඊට හිමිව ඇත.

වත්මන් රජය සමයේ එම සේවාවන් ඉතා සාර්‍ථකව සිදු කෙරෙන අතර මින් පෙර නොවූ විරූ ආකාරයෙන් ඒවා නිසි ප්‍රතිලාභීන් වෙත ලබාදීමට පරිපාලනමය අවධානය යොමුව ඇති බවද වාර්තා වේ.

වැදගත්ම දෙය නම් පසුගිය කාලය තුළ ප්‍රදේශයේ මත්ද්‍රව්‍ය ජාවාරම් සහ ඒ ආශ්‍රිත ක්‍රියාකාරකම් පාලනය කර පොලිසියට කිසිදු දේශපාලන මැදිහත් වීමක් නොමැතිව ස්වාධීනව නීතිය හා සාමය ආරක්ෂා කිරීමට පරිසරයක් නිර්මාණය කර තිබීමයි. මේ හරහා මත්ද්‍රව්‍ය ජාවාරමට සහ අලෙවියට එරෙහිව නීතිමය ක්‍රියාමාර්ග ශක්තිමත් කර ඇති අතර මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වූවන්ට දඬුවම් ලබාදීමට පමණක් නොව ප්‍රතිකාර ලබාදීමට සහ ඔවුන් සමාජයට සමාජගත කිරීමට පුනරුත්ථාපනය කිරීමට පුනරුත්ථාපන මධ්‍යස්ථානයක් ද නිර්මාණය කර ඇත.

එමෙන්ම මඩකලපුව දිස්ත්‍රික් සංවර්ධන කමිටු සභාපති සුනිල් හංතුන්නෙත්ති මහතාගේ වැඩපිළිවෙළ මත ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස මට්ටමින් දක්නට ලැබෙන අඩුපාඩු පිළිබඳව අවධානය යොමු කිරීමට ප්‍රධාන ඇමැතිවරුන්ට සහ නියෝජ්‍ය ඇමැතිවරුන්ට දිස්ත්‍රික්කයට ආරාධනා කෙරේ. ඒවාට මධ්‍යම රජය හරහා විසඳුම් ලබාගෙන සෘජුවම ජනාධිපතිතුමාගේ අවධානයට යොමු කිරීමට කටයුතු කරනවා. මෙවැනි ක්‍රියාමාර්ග හරහා කලාපීය අවශ්‍යතා සඳහා නිසි විසඳුම් ලබාදීමට රජය ගන්නා උත්සාහය පිළිබඳව ප්‍රාදේශීය ලේකම්වරුන් දෙදෙනාම සිය සතුට පළ කළහ.

ජාතික ජන බල රජය ප්‍රමුඛ දූෂණයෙන් තොර නව දේශපාලන සංස්කෘතිය යටතේ පරිපාලන ව්‍යුහයේ සිදු වූ වෙනස්කම් තම ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශවල පරිපාලන පරිසරයට ලබා දී ඇති ප්‍රතිලාභ සහ විනිවිදභාවය පිළිබඳ නිලධාරීන් සිය සතුට පළ කරති.

මේ අනුව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජනබල රජය යටතේ ඔඩ්ඩමාවඩි සහ වාලච්චේන ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස දෙකෙහි සිදු කෙරෙන පරිපාලන හා සංවර්ධන කටයුතු ජනතා අවශ්‍යතාවලට ප්‍රමුඛත්වය දෙන ජනතා සේවාවන් ශක්තිමත් කිරීම අරමුණු කර ගෙන ඇත. 

තම ප්‍රදේශයේම නිලධාරීන් පරිපාලන වගකීම් භාරගෙන රජයේ සැලසුම් ජනතාව අතරට ගෙන යමින් ප්‍රදේශයේ පවතින අඩුපාඩුවලට විසඳුම් ලබාදීමට කටයුතු කිරීම කල්කුඩා ජනතාවගේ අපේක්ෂාවන්ට අනුව වැදගත් පරිපාලන අපේක්ෂාවක් ලෙසින් කටයුතු කිරීම නිසා ඔටමාවාඩි වසායිචේනයි ප්‍රජාව සැනසුම් සුසුම් හෙළයි.

මේ අනුව, කල්කටාවේ බටහිර කෝරලිපත්තු සහ කෝරලිපත්තු මධ්‍ය ප්‍රදේශයේ ජනතාවගේ අපේක්ෂාව වන්නේ නිලධාරියකු ස්වදේශිකයකු ද විදේශිකයකු ද යන්න නොවේ; ඔහු නීතියට හා පරිපාලන රෙගුලාසිවලට අනුකූලව කිසිදු දේශපාලන ඇඟිලි ගැසීම්වලට හෝ බලපෑම්වලට ඉඩ නොතබමින් අවංකව සහ අපක්ෂපාතීව ජනතා අවශ්‍යතා සහ අයිතිවාසිකම් වෙනුවෙන් සේවය කරන්නේද යන්න මත රඳා පවතී. 

පසුගිය කාලයේ දක්නට ලැබුණු පරිදි දේශපාලන බලපෑම්වලට හා ඇඟිලි ගැසීම්වලට ඉඩ නොදී රාජ්‍ය නිලධාරීන්ගේ ස්වාධීනත්වය සහ මහජනතාවගේ සේවයේ ගුණාත්මක බව ආරක්‍ෂා කිරීම යහපාලනයේ ප්‍රධාන පදනමයි. එවැනි වගකීමකින් හා ස්වාධීනව කටයුතු කරන ප්‍රාදේශීය ලේකම්වරුන්ගේ පරිපාලන ප්‍රවේශය කලාපයේ පාසල් ඇතුළු සියලුම රාජ්‍ය ආයතනවලට හොඳ ආදර්ශයක් වනු ඇත.

එබැවින් රාජ්‍ය නිලධාරීන්ගේ ස්වාධීනත්වය තහවුරු කිරීම සහ දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව වගකිවයුතු සහ ජනතා කේන්ද්‍රීය පාලනයක් ප්‍රවර්ධනය කිරීම ජාතික ජනබල රජයේ යහපාලන ප්‍රවේශයට ශක්තිමත් පදනමක් සපයමින් බටහිර කෝරලපත්තු සහ කෝරලපත්තු මැද ප්‍රදේශයේ තිරසාර සංවර්ධනයට සහ ජනතා විශ්වාසය තහවුරු කිරීමට හේතු වනු ඇත.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් වර මංජරි වෙනුවෙන්,
27-09-2026.
සිංහල පරිවර්තනය සමග) ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேச செயலகங்களின் உண்மையான நிர்வாகச் சுதந்திரமும், NPP ஆட்சியில் மக்களின் திருப்தியும். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 27, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.