Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு - மண்முனை பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவிப்பு : தேசிய விவாதப் போட்டியில் இரண்டாமிடம்!


உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட FSLGA விவாதப் போட்டியில் 80க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் பங்கேற்ற நிலையில், மண்முனை பிரதேச சபை தேசிய ரீதியில் இரண்டாமிடம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திரந்தது.


இந்த வெற்றியை முன்னிட்டு, தேசிய மட்ட விவாதப் போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்ற மண்முனை பிரதேச சபை உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு  (30) மண்முனை பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


மண்முனை பிரதேச சபையின் ஏற்பாட்டில், தவிசாளர் கே. செந்தில் குமார் தலைமையில், பிரதேச சபை செயலாளர் ரோகிணி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் றிப்கா சபீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


இதன்போது, தேசிய விவாதப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பணப்பரிசில்களும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் றிப்கா சபீன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


மேலும், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து கேக் வெட்டி, இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


மண்முனை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து உறுப்பினர்களையும் பாகுபாடின்றி வழிநடத்தி வரும் தவிசாளர் கே. செந்தில் குமாரின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த வெற்றி கிடைத்துள்ளது.


தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மண்முனை பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட போட்டியில் பங்கேற்ற பிரதேச சபை உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் றிப்கா சபீன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு - மண்முனை பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவிப்பு : தேசிய விவாதப் போட்டியில் இரண்டாமிடம்! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.