Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) இலங்கையில் ஊழலற்ற புதிய அரசியல் அத்தியாயம்! NPPயின் சவால்களும் மக்களின் எதிர்பார்ப்புகளும்.


இலங்கையில் ஊழலற்ற புதிய அரசியல் அத்தியாயம்! NPPயின் சவால்களும் மக்களின் எதிர்பார்ப்புகளும்.     

அரசியல் தலையீடற்ற சுயாதீன அரச துறைகளை உருவாக்குதல், கடந்த கால ஊழல்களுக்குத் தண்டனை வழங்குதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் ஆகியவை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரதான இலக்குகளாகும்.


இலங்கையின் பழைமையான அரசியல் கலாசாரத்தை மாற்றி, தூய்மையான சமூகத்தை உருவாக்கும் இந்த வரலாற்றுக் கடமையில் நாட்டின் இளைய தலை முறையினர் முக்கிய பங்காற்ற வேண்டும்.


பல தசாப்தங்களாக இலங்கையை ஆட்டிப்படைக்கும் ஊழல் மற்றும் இலஞ்சப் பிரச்சினைகள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பொருளாதார சீரழிவையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த யதார்த்த நிலைக்கு மத்தியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது (NPP) அரசியல் எழுச்சி ஏற்படுத்தி பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தை கைப்பற்றியது.


இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் ஆழமான மாற்றத்தை எதிர்பார்க்கும் புத்திஜீவிகள் மற்றும் நடுநிலை சிந்தனையாளர்களின் பார்வையில், இந்த அரசியல் எழுச்சி ஒரு முக்கிய திருப்பு முனையாகப் பார்க்கப்படுகிறது.  



ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியின் வெற்றியை வெறுமனே பொருளாதார வளர்ச்சி, தேசிய வருமானம், முதலீடு அல்லது நிதி இலக்குகள் போன்ற புள்ளிவிவரங்களால் மட்டும் அளவிட முடியாது. ஒரு அரசாங்கத்தின் உண்மையான வெற்றி என்பது அந்த நாட்டின் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்களிலேயே பிரதிபலிக்க வேண்டும். 


ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ முடியுமா? இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் உருவாகின்றனவா? கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மக்களுக்கு சமமாகக் கிடைக்கின்றனவா? அரச நிறுவனங்களில் ஊழலும் அரசியல் தலையீடும் குறைகின்றனவா? சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்ற கேள்விகளுக்கான நடைமுறைப் பதில்களில்தான் ஆட்சியின் உண்மையான வெற்றி வெளிப்படும்.


நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்புகள் வலுவிழப்பதற்கும், வெளிநாட்டு முதலீடுகள் குறைவதற்கும், கடுமையான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்கும் ஊழல் கலாசாரமே பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது. 


இத்தகைய சூழலில், பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்டு வெளிப்படையான, நேர்மையான மற்றும் பொறுப்புக் கூறக்கூடிய புதிய ஆட்சி முறைக்கான தேவை மக்கள் மத்தியில் தீவிரமாக எழுந்தது.


ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு வறுமையோ மூலவளங்களின் பற்றாக்குறையோ காரணமாவதில்லை. மாறாக, நேர்மை என்பது சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்விலிருந்து விலகி, எட்டாக்கனி போன்ற ஒரு ஆடம்பரமாக மாறும் போதே அந்த நாடும் அங்கே வாழும் சமூகங்களும் அதாலபாதாளத்தில் விழத்தொடங்குகிறது.


இந்தக் பின்னணியில்தான், தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் அரசியல் கொள்கைகளும், "ஊழலற்ற நாடு" என்ற அவரது பிரதான வாக்குறுதிகளும் பொதுமக்களின் நம்பிக்கையையும் கவனத்தையும் ஈர்த்தன. 


இதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் பெற்ற வெற்றி, இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்திற்கான மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியதுடன், புதிய அரசியல் நகர்வுகளுக்கான பாதையையும் வகுத்தது.


தற்போது இந்த வெற்றியின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த பல முக்கிய மாற்றங்கள் நடை முறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. 


அதில், அரசியல் தலையீடுகளிலிருந்து விடுபட்டு அரச துறைகள் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் இயங்குவதை உறுதி செய்தல், கடந்த கால ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குதல், திருடப்பட்ட தேசிய சொத்துக்களை மீட்டெடுத்தல் மற்றும் நிதி மேலாண்மையை வெளிப்படையான முறையில் கையாண்டு பொருளாதார இஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் ஆகியவை அவற்றுல் முக்கியமானவைகளாக உள்ளது.


அந்த வகையில், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியின் கீழ், இலங்கையை ஊழலும் இலஞ்சமும் அற்ற தேசமாக மாற்றுவதற்கான உறுதியானதொரு இலக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதனை வெறும் அரசியல் கோஷமாக பார்க்க முடியாது. மாறாக, பல தசாப்தங்களாகச் சீரழிந்த முறையைத் தலைகீழாக மாற்றுவதற்கான வரலாற்றுத் திருப்பமாகும்.


இலஞ்சமும் ஊழலும் சமூகத்தின் நரம்புகளில் ஊடுருவி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மழுங்கடித்துள்ளன. 


எதிர்கால சந்ததியினரின் கல்விக்காக அரசினால் ஒதுக்கப்பட்ட நிதி, அதிகாரத் திமிர் கொண்டவர்களின் சொந்தப் பைகளுக்குள் மறைந்து போகும் போது, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. 


கடின உழைப்பாளி, ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமையைப் பெறுவதற்காகக்கூட இலஞ்சப் பேய்க்குப் பலியாக நேரிடும் அவல நிலை தொடர இன்னமும் அனுமதிக்க முடியாது. 


இந்த நிலைமைகளை மாற்றியமைக்கவே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசியல் பயணம் நீண்ட பல தசாப்தங்களின் தியாகங்களுக்கு மத்தியில் சமத்துவ கொள்கை அரசியலின் வெளிப்பாடாக தொடங்கப்பட்டுள்ளது.


மக்களின் வரிப்பணம் மக்களின் நலனுக்கே முழுமையாகப் பயன்படுவதை உறுதி செய்வதும், சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக மதிக்கப்படுவதை நிலைநாட்டுவதும் இந்த மாற்றத்தின் அடிப்படைகளாகும். 


ஊழலற்ற ஒரு நாட்டை உருவாக்குவதன் மூலமே தேசத்தின் உண்மையான சுய மரியாதையையும் பொருளாதார வளர்ச்சியையும் மீட்டெடுக்க முடியும். 


நேர்மை மீண்டும் இந்த நாட்டின் அடித்தளமாக மாறுவதே இந்த புதிய மக்கள் விடுதலை முன்னணி செதுக்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  தலைமையிலான அத்தியாயத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது.


நேர்மை மீண்டும் நாட்டின் நிர்வாகத்தின் அடையாளமாக மாறும்போது மட்டுமே மக்கள் அரசாங்கங்கள் மீது இழந்த நம்பிக்கையை முழுமையாக மீட்டெடுக்க முடியும். 


ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது வெறும் சட்ட நடவடிக்கைகளின் தொகுப்பு என பார்க்க முடியாது. அது அரசியல் கலாசாரத்தையே மாற்றும் ஒரு சமூகப் பொறுப்பாகும். அந்த மாற்றத்தின் வழியாகவே இலங்கையின் பொருளாதார வளமும் தேசிய சுயமரியாதையும் நிலையான அடித்தளத்தின் மீது மீண்டும் கட்டியெழுப்பப்பட முடியும்.


அரசாங்கம் மேற்கொள்ளும் சீர்திருத்த முயற்சிகளுக்கு மத்தியில், ஜனநாயகச் செயல்முறைகளில் மக்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வும் ஈடுபாடும் மட்டுமே இந்த மாற்றங்களை நிலைநிறுத்த உதவ முடியும்.


நாட்டில் வாழுகின்ற சமூகங்கள் அனைத்து விதமான இன மற்றும் மத வேறுபாடுகளையும் கடந்து, பொதுவான தேசிய நலனுக்காக ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் மிக அவசியமான தேவையாக உள்ளது.


ஆகவே, பல தசாப்தங்களாக வேரூன்றியிருக்கும் இலஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக கலாச்சாரத்தை மாற்றுவது என்பது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள மிகக் கடினமான சமூகவியல் சவால் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



இது வெறுமனே சில ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நிர்வாகப் பணியாக கருத முடியாது. மாறாக, அதிகாரத்தைப் பயன்படுத்தும் அரசியல் பண்பாட்டிலிருந்தே தனிப்பட்ட சலுகை, குடும்ப ஆதிக்கம், அரச வளங்களின் முறைகேடான பயன்பாடு மற்றும் பொறுப்பற்ற நிர்வாகம் ஆகியவற்றை அகற்றி, அதற்குப் பதிலாக நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுநலன் ஆகியவற்றை ஆட்சியின் அடிப்படை விழுமியங்களாக நிலைநிறுத்த வேண்டிய ஆழமான சமூக மாற்றமாகும்.



இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழக்கூடியதல்ல. பல தசாப்தங்களாக வேரூன்றியுள்ள இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு தொடர்ச்சியான அரசியல் உறுதியும், வலுவான நிறுவனங்களும், சட்டத்தின் ஆட்சியும், மக்களின் விழிப்புணர்வும் அவசியமாகின்றன.


ஊழலற்ற ஒரு முறையை உருவாக்குவதற்குத் தற்போதைய ஆட்சியாளர்களின் முன்மாதிரியான நிர்வாகம் அடிப்படையாகத் தேவைப்படுவதுடன், நீண்டகாலத் தொடர் உழைப்பும் அவசியமாகிறது. 


குடிமக்களிடையே நேர்மை, சுயக்கட்டுப்பாடு, பொறுப்புணர்வு போன்ற உன்னத பண்புகள் இயல்பான கலாச்சாரமாக மாறும் போது மட்டுமே, இலஞ்சமற்ற தூய்மையான சமூகம் முழுமையான வடிவம் பெறும் என்பது வரலாறு எமக்கு கற்பித்துள்ள நிதர்சனமாகும்.


அந்த வகையில், இங்குதான் இலங்கையின் இளைஞர்களின் பங்கு தீர்மானகரமானதாகிறது.


இளைஞர்கள் வெறுமனே தேர்தல் காலங்களில் வாக்குகளை வழங்கும் சமூகப் பிரிவாக இருக்கக் கூடாது. அவர்கள் நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்கும் சக்தியாகவும், சமூகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தலைமுறையாகவும், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மாற்றத்தின் முன்னணிப் பலமாகவும் மாற வேண்டும். 


நாட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புவதோடு நிற்காமல், அதற்கான தீர்வுகளை உருவாக்குவதிலும் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.


எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் வெற்றி என்பது பொருளாதார இலக்குகளைத் தாண்டி, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் உண்மையான மாற்றங்களிலேயே தங்கியுள்ளது. அந்த மாற்றத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு நாட்டின் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது.



நேர்மை, நீதி, பொறுப்புணர்வு மற்றும் துணிச்சல் ஆகிய பண்புகளைக் கொண்டு இலங்கையின் பழைமையான அரசியல் கலாசாரத்தை முற்றாக மாற்றுவதோடு, நாட்டின் நிகழ் காலமாகவும், எதிர்காலமாகவும் திகழும் இளம் தலை முறையினர் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான பலமாக மாறுவது காலத்தின் தேவையாகும்.

அஹமட் இர்ஷாட்.
04-10-2026

ශ්‍රී ලංකාවේ දූෂණයෙන් තොර නව දේශපාලන පරිච්ඡේදයක්! NPP හි අභියෝග සහ ජනතා අපේක්ෂාවන්! இலங்கையில் ஊழலற்ற புதிய அரசியல் அத்தியாயம்! NPPயின் சவால்களும் மக்களின் எதிர்பார்ப்புகளும்.     

වත්මන් ජනාධිපති අනුරකුමාර් දිසානායක මහතාගේ ප්‍රධාන අරමුණු වන්නේ දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් තොර ස්වාධීන රාජ්‍ය දෙපාර්තමේන්තු ඇති කිරීම, අතීත දූෂණවලට දඬුවම් කිරීම සහ නීතියේ ආධිපත්‍යය ආරක්ෂා කිරීම ය.

ශ්‍රී ලංකාවේ පැරණි දේශපාලන සංස්කෘතිය වෙනස් කර පිරිසිදු සමාජයක් බිහිකිරීමේ මෙම ඓතිහාසික යුතුකම වෙනුවෙන් රටේ තරුණ පරම්පරාව ඉතා වැදගත් කාර්යභාරයක් ඉටු කළ යුතුය.
+++++++++++++++++

දශක ගණනාවක් තිස්සේ ශ්‍රී ලංකාව පීඩාවට පත් කළ දූෂණ හා අල්ලස් ප්‍රශ්න රටේ සමස්ත සංවර්ධනයට හා ආර්ථික පරිහානියට හේතු වී තිබේ. මේ යථාර්ථය මැද අනුරකුමාර් දිසානායක ජනාධිපතිවරයාගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගය දේශපාලන පෙරළියක් කර බහුතර බලයෙන් බලය අල්ලා ගත්තේය.

ශ්‍රී ලංකාවේ සාම්ප්‍රදායික දේශපාලන සංස්කෘතියේ ගැඹුරු වෙනසක් අපේක්ෂා කරන බුද්ධිමතුන් සහ මධ්‍යස්ථ චින්තකයින් විසින් මෙම දේශපාලන පෙරළිය ප්‍රධාන හැරවුම් ලක්ෂයක් ලෙස සලකයි.  

ජනාධිපතිතුමා ප්‍රමුඛ රජයේ සාර්ථකත්වය හුදෙක් ආර්ථික වර්ධනය, ජාතික ආදායම, ආයෝජන හෝ මූල්‍ය ඉලක්ක වැනි සංඛ්‍යාලේඛනවලින් මනින්නට බැහැ. රජයක සැබෑ සාර්ථකත්වය පිළිඹිබු විය යුත්තේ එරට සාමාන්‍ය ජනතාවගේ දෛනික ජීවිතයේ සාධනීය වෙනස්කම් තුළින්ය. 

පවුලකට සාමයෙන් ජීවත් විය හැකිද? තරුණ තරුණියන්ට යහපත් රැකියා උත්පාදනය කරනවාද? අධ්‍යාපනය සහ සෞඛ්‍ය සේවාවන් මිනිසුන්ට එකසේ ලබා ගත හැකිද? රාජ්‍ය ආයතනවල දූෂණ හා දේශපාලන ඇඟිලි ගැසීම් අඩු වෙනවා? නීතිය ඉදිරියේ සැමට එක හා සමානව සලකනවාද? ප්‍රශ්නවලට ප්‍රායෝගික පිළිතුරු දීමෙන් පාලනයේ සැබෑ සාර්ථකත්වය හෙළි වනු ඇත

රටේ පාලන ව්‍යුහයන් දුර්වල වීමට, විදේශ ආයෝජන පහත වැටීමට සහ දරුණු ආර්ථික අර්බුදවලට ප්‍රධාන හේතුව ලෙස සැලකෙන්නේ දූෂණ සංස්කෘතියකි. එවැනි වටපිටාවක් තුළ සාම්ප්‍රදායික දේශපාලන ක්‍රමවලින් ඔබ්බට විවෘත, අවංක, වගවීම සහිත නව පාලන ක්‍රමයක් පිළිබඳ ඉල්ලීම ජනතාව තුළ මතුව තිබේ.

රටක පරිහානියට හේතුව දුප්පත්කම හෝ සම්පත් හිඟකම නොවේ. ඊට පටහැනිව, සාමාන්‍ය මිනිසුන්ගේ දෛනික ජීවිතයෙන් අවංකභාවය ඉවත් කර අෂ්ටාංගික වැනි සුඛෝපභෝගී දෙයක් බවට පත් වූ විට, රට සහ එහි ජීවත් වන ප්‍රජාවන් අගාධයට වැටීමට පටන් ගනී.

ජාතික ජන බලවේගයේ (NPP) නායක අනුරකුමාර් දිසානායකගේ දේශපාලන ප්‍රතිපත්ති සහ "දූෂණයෙන් තොර දේශයක්" පිලිබඳ ඔහුගේ ප්‍රමුඛ පොරොන්දු ජනතා විශ්වාසය හා අවධානය දිනා ගෙන ඇත්තේ මෙම පසුබිම යටතේය. 

එහි ප්‍රතිඵලයක් ලෙස 2024 ජනාධිපතිවරණ ජයග්‍රහණයෙන් ශ්‍රී ලංකාවේ දේශපාලන සංස්කෘතියේ දැවැන්ත වෙනසක් සඳහා වූ ජනප්‍රිය අපේක්ෂාවන් හෙළිදරව් වූ අතර නව දේශපාලන ව්‍යාපාර සඳහා මංපෙත් විවර විය.
දැන් මේ සාර්ථකත්වය හරහා ජනතාව බලාපොරොත්තු වන වැදගත් වෙනස්කම් රැසක් ප්‍රායෝගිකව ක්‍රියාත්මක වෙමින් පවතිනවා.

ඒ අතර, දේශපාලන මැදිහත්වීම්වලින් තොර රාජ්‍ය දෙපාර්තමේන්තුවල ස්වාධීනත්වය සහ අවංකභාවය තහවුරු කිරීම, අතීත දූෂණ වංචා පිළිබඳ විධිමත් පරීක්‍ෂණ පවත්වා අපරාධකරුවන්ට දඬුවම් ලබාදීම, සොරාගත් ජාතික වත්කම් ප්‍රතිෂ්ඨාපනය කිරීම, විනිවිදභාවයෙන් යුත් මූල්‍ය කළමනාකරණය තුළින් ආර්ථික ස්ථාවරත්වය ඇති කිරීම.

ඒ ආකාරයට වත්මන් ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ පාලනය යටතේ ශ්‍රී ලංකාව දූෂණයෙන් හා අල්ලසෙන් තොර රටක් බවට පත් කිරීමේ ස්ථිර ඉලක්කයක් ක්‍රියාත්මක කර තිබේ. මෙය හුදු දේශපාලන සටන් පාඨයක් ලෙස දැකිය නොහැක. ඒ වෙනුවට, එය දශක ගණනාවක් තිස්සේ පිරිහෙමින් පවතින පද්ධතිය ආපසු හැරවීමට ඓතිහාසික පෙරළියකි.

අල්ලස හා දූෂණය සමාජයේ නහරවලට විනිවිද ගොස් රටේ සමස්ත සංවර්ධනය අඩාල කර ඇත. අනාගත පරපුරේ අධ්‍යාපනය සඳහා රජය වෙන්කර ඇති මුදල් අහංකාරයන්ගේ සාක්කුවට ගිලිහී යන විට දහස් ගණනක දරුවන්ගේ අනාගතය ප්‍රශ්නාර්ථයකි. 

වෙහෙස මහන්සි වී වැඩ කරන පුරවැසියෙකුට තම මූලික අයිතීන් ලබා ගැනීමට පවා අල්ලස් දෙන අවමානයට ගොදුරු වීමේ දුක්ඛිත තත්ත්වය තවදුරටත් පැවතීමට ඉඩ දිය නොහැක. 

මෙම තත්ත්වයන් වෙනස් කිරීම සඳහා දීර්ඝ දශක ගණනාවක කැපකිරීම් මධ්‍යයේ සමානාත්මතා දේශපාලනයේ ප්‍රකාශනයක් ලෙස අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ නායකත්වයෙන් නව දේශපාලන ගමනක් ආරම්භ වී තිබේ. මෙම වෙනසේ මූලික කරුණු වන්නේ ජනතාවගේ බදු මුදල් සම්පූර්ණයෙන්ම ජනතා යහපත සඳහා යෙදවීම සහතික කිරීම සහ නීතියේ ආධිපත්‍යය සැමට එකසේ ගරු කරන බව තහවුරු කිරීමයි.

ජාතියේ සැබෑ ආත්ම ගරුත්වය සහ ආර්ථික සංවර්ධනය යථා තත්ත්වයට පත් කළ හැක්කේ දූෂණයෙන් තොර රටක් නිර්මාණය කිරීමෙන් පමණි. ජනතා විමුක්ති පෙරමුණ ප්‍රමුඛ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ මෙම නව පරිච්ඡේදයේ මූලික අරමුණ නැවත වරක් මේ රටේ පදනම බවට අවංකභාවය පත් කිරීමය.

අවංකකම නැවත වරක් ජාතියේ පාලනයේ ලක්ෂණය බවට පත් වූ විට පමණක් මිනිසුන්ට ආණ්ඩු කෙරෙහි නැති වී ගිය විශ්වාසය සම්පූර්ණයෙන්ම යථා තත්ත්වයට පත් කළ හැකිය. දූෂණයට එරෙහි සටන හුදු නීතිමය ක්‍රියාමාර්ගයක් ලෙස දැකිය නොහැක. එය දේශපාලන සංස්කෘතියම වෙනස් කරන සමාජ වගකීමකි. ශ්‍රී ලංකාවේ ආර්ථික සමෘද්ධිය සහ ජාතික ආත්ම අභිමානය ස්ථාවර පදනමක් මත යළි ගොඩනැගිය හැක්කේ එම වෙනස තුළින් පමණි.

රජය විසින් ගනු ලබන ප්‍රතිසංස්කරණ ප්‍රයත්නයන් මධ්‍යයේ, මෙම වෙනස්කම් තිරසාරව පවත්වා ගැනීමට උපකාරී වනුයේ ප්‍රජාතන්ත්‍රවාදී ක්‍රියාවලියට ජනතාව අඛණ්ඩව දැනුවත් කිරීම සහ සම්බන්ධ වීම පමණි. රටේ වෙසෙන ප්‍රජාවන් සියලු වර්ගවල වාර්ගික හා ආගම් භේද පසෙක ලා පොදු ජාතික අවශ්‍යතා වෙනුවෙන් එක්ව ක්‍රියා කිරීම කාලීන කාලීන අවශ්‍යතාවයකි.

එබැවින් දශක ගණනාවක් පැරණි දූෂණ හා බලය අනිසි ලෙස භාවිතා කිරීමේ සංස්කෘතිය වෙනස් කිරීම ජාතික ජන බලය (NPP) රජය මුහුණ දෙන දුෂ්කරම සමාජ විද්‍යාත්මක අභියෝගය බවට සැකයක් නැත.

එය ඇතැම් දූෂිත ක්‍රියාකාරකම් වැලැක්වීම සඳහා වූ පරිපාලන කාර්යයක් ලෙස සරලව සැලකිය නොහැකිය. ඒ වෙනුවට, එය පෞද්ගලික වරප්‍රසාද, පවුල් ආධිපත්‍යය, රාජ්‍ය සම්පත් අවභාවිතය සහ බලය හසුරුවන දේශපාලන සංස්කෘතියෙන් අයථා කළමනාකරණය ඉවත් කර සාධාරණත්වය, විනිවිදභාවය, වගවීම සහ පොදු යහපත පාලනයේ මූලික හරයන් ලෙස ප්‍රතිස්ථාපනය කිරීම අවශ්‍ය වන ගැඹුරු සමාජ වෙනසකි.

මෙම වෙනස එක රැයකින් සිදු විය නොහැක. දශක ගණනාවක් තිස්සේ මුල් බැසගත් අල්ලස, දූෂණය සහ බලය අනිසි ලෙස භාවිතා කිරීම යන දේශපාලන සංස්කෘතිය වෙනස් කිරීමට අඛණ්ඩ දේශපාලන අධිෂ්ඨානය, ශක්තිමත් ආයතන, නීතියේ ආධිපත්‍යය සහ මහජන දැනුවත්භාවය අවශ්‍ය වේ.

දූෂණයෙන් තොර ක්‍රමයක් ගොඩනැගීම සඳහා වත්මන් පාලකයන්ගේ ආදර්ශවත් පාලනයක් සහ දිගුකාලීන අඛණ්ඩ වැඩකටයුතු අවශ්‍ය වේ. පුරවැසියන් අතර පවතින අවංකකම, ආත්ම දමනය, වගකීම වැනි උතුම් ගුණාංග සාමාන්‍ය සංස්කෘතියක් බවට පත් වූ විට පමණක් පිරිසිදු පිරිසිදු සමාජයක් සම්පූර්ණ ලෙස හැඩගැසෙන බව ඉතිහාසය අපට උගන්වා ඇති සත්‍යයකි.

ඒ නිසා ලංකාවේ තාරුණ්‍යයේ කාර්යභාරය තීරණාත්මක වෙන්නේ මෙතැනදී. තරුණයින් මැතිවරණ කාලවලදී ඡන්දය දෙන සමාජ කොටසක් නොවිය යුතුය. ඔවුන් රටේ ප්‍රතිපත්ති සම්පාදනයට සහභාගී වන බලවේගයක් බවටත්, සමාජ වගකීම් වැළඳ ගන්නා පරපුරක් බවටත්, දූෂණයට අසාධාරණයට එරෙහිව හඬ නගන පෙරටුගාමී බලවේගයක් බවටත් පත් විය යුතුය. තරුණ පරපුර රටේ අනාගතය ප්‍රශ්න කිරීමෙන් නොනැවතී ඊට විසඳුම් නිර්මාණය කිරීමට ද සහභාගි විය යුතුය.

එබැවින් අනුරකුමාර් දිසානායක ජනාධිපතිවරයාගේ පාලනයේ සාර්ථකත්වය ආර්ථික ඉලක්කවලින් ඔබ්බට ගොස් සාමාන්‍ය ජනතාවගේ එදිනෙදා ජීවිතයේ සැබෑ වෙනස්කම් මත රඳා පවතී. ඒ වෙනස ඇතිකිරීමේ විශාල වගකීම පැවරෙන්නේ රටේ තරුණ පරපුර අතේ.

ශ්‍රී ලංකාවේ පැරණි දේශපාලන සංස්කෘතිය අවංකභාවය, යුක්තිය, වගකීම සහ ධෛර්යය යන ගුණාංගවලින් පරිවර්තනය කර නව දේශපාලන හා සමාජීය වෙනසක් සඳහා බලවේගයක් බවට පත් කිරීම රටේ වර්තමාන සහ අනාගත තරුණ පරපුරට යුගයේ අවශ්‍යතාවයයි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
04-10-2026.
සිංහල පරිවර්තනය සමග) இலங்கையில் ஊழலற்ற புதிய அரசியல் அத்தியாயம்! NPPயின் சவால்களும் மக்களின் எதிர்பார்ப்புகளும். Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 04, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.