காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத அங்குரார்பண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான வாசிப்பு மாத அங்குரார்பண நிகழ்வு இன்று 01.10.2026 நூலக மண்டபத்தில் நூலகர் பௌமியா ஷறூக் தலைமையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் கௌரவ நகர முதல்வர் SHM. அஸ்பர் JP, UM அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன் நகர சபைச் செயலாளர் திருமதி றினோஸா முப்லிஹ், கணக்காளர் MBM. இத்ரீஸ் SLAcS, நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அஷ்-ஷுஹதா பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாசிப்பு மாதக் கொடிகள் அணிவிக்கப்பட்டு, தேசிய வாசிப்பு மாதப் பிரகடனம் மொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கௌரவ நகர முதல்வர் தனது சிறப்புரையை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்களுக்கான இலவச நூலக அங்கத்துவ அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, தேசிய வாசிப்பு மாத விழிப்புணர்வுப் பதாதையும் உத்தியோகபூர்வமாகத் திரைநீக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வின் ஓர் அங்கமாக வாசிப்பின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலமும் பொதுமக்களுக்கான துண்டுப் பிரசுர விநியோகமும் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத அங்குரார்பண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 01, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 01, 2026
Rating:




















கருத்துகள் இல்லை: