Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் வைபவம் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் ஜவாத் கலந்து கொண்டார்.


தேசிய பாடசாலையின் மாணவத் தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் வைபவம்  புதன்கிழமை (30/09/2026)  மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க்  M.M.ஜவாத் (SLEAS-I) அவர்களின் பிரதம பங்குபற்றலுடன் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் U.L. மன்சூர் 
(SLPS-I) அவர்களின் தலைமையில் வெகு விமரிசையாக கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.



சுமார் 80 மாணவிகள் 2026 ஆண்டின் மாணவத் தலைவிகளாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் மாணவத் தலைவிகளுக்கு சின்னம் கூட்டப்பட்டு அவர்களால் பூரணப்படுத்தப்பட்ட
(Leadership and Team building Work shop) பயிற்சி நெறிக்கான சான்றிதழ்களும்
கடமைப்பட்டியலும் ஒப்பந்தப் பிரதியும் நியமனக்கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வின் விஷேட அம்சமாக இப்பாடசாலையில் கல்வி கற்று தற்போது சட்டத்தரணியாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் கடமையாற்றும் திருமதி MM. மஸா மிஹா LLB அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உச்சாகமூட்டக்கூடிய அனுபவ உரை ஒன்றை சிறப்பாக நிகழ்த்தினார்கள்.


இங்கு பிரதம அதிதி அஷ்ஷெய்க் M.M ஜவாத்(SLEAS-I) அவர்கள் தமதுரையில் மனிதன் நடுநிலைத்தன்மையோடு வாழ்வதற்கு அறிவுடன்  சிறந்த பண்பாடும் அமையப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.


விஷேட அதிதி சட்டத்தரணி MM மஸாமிஹா LLB தமது விஷேட உரையில் எனது உயர்ச்சிக்கு முதன்மைக் காரணி பாடசாலையும் அதன் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளும் எனது முழுமையான பங்குபற்றலுமே என்பதை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வுக்கு காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி MM. சாலிக் (SLEAS)
மட் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரி M. சியாட் பாடசாலை SDEC, PPA உறுப்பினர்கள் உட்பட கல்லூரி பிரதி, உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Mr. APM. Jalaldeen BBA
ஊடகப் பிரிவு
மீரா பலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி.






































காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் வைபவம் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் ஜவாத் கலந்து கொண்டார். Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.