Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகர சபையினால் காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு.


(ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட "உள்ளூராட்சி வாரம் - 2026" கொண்டாட்டங்களின் இறுதி நாள் நிகழ்வு (24.09.2026) வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.


பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கைக்கு அமைவாக, "வளமான நாடு அழகான வாழ்வு - புனருதயே புரவர 'புத்துயிர்க்கும் புது நகரம்'" எனும் தேசிய தொனிப்பொருளின் கீழ் கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பல்வேறு சமூக நலன்சார் வேலைத்திட்டங்களுடன் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.


இதன் போது பல்வேறு வழிகளிலும் மேற்படி நிகழ்வுகளுக்கு பங்களிப்புச் செய்த காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கோட்டம் சார்பாக இந்த நினைவுச்சின்னத்தை உளவள ஆசிரிய ஆலோசகர் ABM.ரசீன்-BA பெற்றுக்கொண்டார்.
வாழ்த்துக்கள்.



காத்தான்குடி நகர சபையினால் காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு. Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.