Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகரசபையின் புனருதயே புரவர "புத்துயிர்க்கும் புதுநகரம்" உள்ளூராட்சி வார நிறைவு நிகழ்வு.

(எம்.பஹத் ஜுனைட்)

வளமான நாடு - அழகான வாழ்வு புனருதயே புரவர ""புத்துயிர்க்கும் புதுநகரம்" உள்ளூராட்சி வாரத்தையொட்டி காத்தான்குடி நகர சபையினால் நடாத்தப்பட்ட நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வு வியாழக்கிழமை (24) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.


காத்தான்குடி நகரசபை செயலாளர் திருமதி.றினோஸா முப்லிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  நகரசபை கணக்காளர் எம்.பீ.எம்.இத்ரீஸ்  கெளரவ அதிதியாகவும் நகரசபை உறுப்பினர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் உள்ளூராட்சி வாரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அம் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.


அத்துடன் நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சமூக நிறுவனங்களும்,  ஊடக சேவையாற்றிய ஊடகவியலாளர்களும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













காத்தான்குடி நகரசபையின் புனருதயே புரவர "புத்துயிர்க்கும் புதுநகரம்" உள்ளூராட்சி வார நிறைவு நிகழ்வு. Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.