காத்தான்குடி நகர சபையின் "உள்ளூராட்சி வாரம் - 2026" இறுதி நாள் நிகழ்வு வெகுவிமரிசையாக நிறைவு!
காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட "உள்ளூராட்சி வாரம் - 2026" கொண்டாட்டங்களின் இறுதி நாள் நிகழ்வு (24.09.2026) வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கைக்கு அமைவாக, "வளமான நாடு அழகான வாழ்வு - புனருதயே புரவர 'புத்துயிர்க்கும் புது நகரம்'" எனும் தேசிய தொனிப்பொருளின் கீழ் கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பல்வேறு சமூக நலன்சார் வேலைத்திட்டங்களுடன் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் இறுதி நாள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு, நகர சபையின் செயலாளர் திருமதி றினோஸா முப்லிஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நகர முதல்வர் SHM. அஸ்பர் JP, UM கலந்து சிறப்பித்தார்.
அத்துடன், நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர், அரச திணைக்களங்களின் தலைவர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், நகர சபை உத்தியோகத்தர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட இல்ல விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் வீரர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழிகப்பட்டன.
குறிப்பாக, நகர சபையின் சுகாதாரப் பிரிவைச் சிறப்பாக வழிநடத்தி, பிரதேசத்தின் தூய்மைப் பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்தமைக்காக அசீம், நஸ்மில் மற்றும் அஸ்ரப் ஆகிய உத்தியோகத்தர்களுக்கு விசேட கௌரவம் அளிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபையின் "உள்ளூராட்சி வாரம் - 2026" இறுதி நாள் நிகழ்வு வெகுவிமரிசையாக நிறைவு!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 25, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 25, 2026
Rating:



























































கருத்துகள் இல்லை: