Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி அல்-மதீனா விளையாட்டுக் கழகத்தின் 28வது வருடாந்த விழா.


ஏ.ஏல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி அல்-மதீனா விளையாட்டுக் கழகத்தின் 28வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அஸ்ரப் ஞாபகார்த்த நினைவுக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழா  (23 ஞாயிறு) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் இடம் பெற்றது.

நிகழ்வின்  முதன்மை அதிதிகளாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் கடற்தொழில் நீரியல்வள  பிரதி அமைச்சர் MSS.அமீர்அலி அவர்களின் காத்தான்குடி பிராந்திய இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான அல்ஹாஜ் AMM.மாஹிர்(JP) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு செயலாளரும் நூறாணியா 04ம் வட்டார அமைப்பாளருமான SM.சப்ரி அவர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி போட்டி நிகழ்வில் பல அணிகள் பங்குபற்றிய போதிலும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி முதல் இடத்தை தனதாக்கிக்கொண்ட இலாஹீஸ் அணிக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்ற அல்-பலாஹ் அணிக்குமான வெற்றிக்கேடயங்கள் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கது.



காத்தான்குடி அல்-மதீனா விளையாட்டுக் கழகத்தின் 28வது வருடாந்த விழா. Reviewed by We Are Anonymous on செப்டம்பர் 24, 2018 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.