காத்தான்குடியிலிருந்து போலி றிசாலா FM, TV அத்துமீறிய சிலரின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு சட்ட நடவடிக்கை விரைவில் ஊடகப் பணிப்பாளர் . கபீர் -எம் -ஹஸன்
றிசாலா மீடியா வேர்ல்ட்டின் றிசாலா FM கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் சிறந்து விளங்கியதை யாவரும் அறிவீர்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்போது றிசாலா FM தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள றிசாலா ஒரு பதிவு செய்யப்பட்ட பெயராகும் அதனை யாரும் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் .
அண்மைக்காலமாக சிலர் றிசாலாவின் பெயரை பயன்படுத்த முயற்சிப்பது எம்மால் அவதானிக்கப்பட்டு வருகிறது தற்போது றிசாலா என்ற பெயரை உபயோகித்து முகப்புத்தகத்தில் FM, TV என ஏதேதோ செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களின் செயல்பாடுகளுக்கும் பணிப்பாளராகிய எனக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை என்பதை எமது ஊடக நேயர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துமீறிய இவர்களின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு. எதிர்காலத்தில் குறித்த சாராருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்வது பற்றி எனது சட்டத்தரணிகளோடு ஆலோசனை நடத்தி வருகின்றேன். தற்போதய போலி றிசாலாவிற்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
கபீர் -எம் -ஹஸன் . ஊடகப் பணிப்பாளர் .
றிஸாலா மீடியா வேர்ல்ட் பீ எல் ஸி,
காத்தான்குடியிலிருந்து போலி றிசாலா FM, TV அத்துமீறிய சிலரின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு சட்ட நடவடிக்கை விரைவில் ஊடகப் பணிப்பாளர் . கபீர் -எம் -ஹஸன்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 18, 2018
Rating:

கருத்துகள் இல்லை: