தேசிய வாசிப்பு மாதம் - 2025 நகர முதல்வர் அஸ்பர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.
2025ம் ஆண்டு ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாத நிகழ்வை காத்தான்குடி நகரசபை பொது நூலகம் மிகவும் சிறப்பாக நடாத்தும் முகமாக நகரமுதல்வர் SHM.அஸ்பர் தலைமையில் (2025/09/08)
காத்தான்குடி பொது நூலகத்தில் கலந்துரையாடல் நடை பெற்றது.
மேற்படி
கலந்துரையாடளில்
நகரசபையின் பதில் செயலாளர் திருமதி. றினோஸா முப்லிஹ், பொது நூலகத்தின் நூலகர் திருமதி. பௌமியா சறூக் மற்றும் நூலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடளில் கூட்டத்தில் நூலகத்தின் காணப்படும் குறைபாடுகள் அவற்றுக்கான தீர்வுகள், செப்டம்பர் மாத உள்ளூராட்சி வாரத்தில் நூலகத்தின் செயற்பாடுகள், தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்கள், எதிர்கால அபிவிருத்தி நோக்கிய நூலகத்தின் Library Automation,
E-Library, Digital Library மற்றும் நூலக தரமுயர்த்தல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதும்
குறிப்பிடத்தக்கது.
தேசிய வாசிப்பு மாதம் - 2025 நகர முதல்வர் அஸ்பர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 08, 2025
Rating:

கருத்துகள் இல்லை: