Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பஞ்சாபில் ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்



காவல்துறையினரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது.

ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓர் ஆண் குழந்தையை கூட பெற்று தரவில்லை என்ற காரணத்தினால் அவர் மனைவியை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மனைவியை கொன்ற அந்த நபர் பிறகு தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சி செய்துள்ளார். இவர்களது மூத்த மகளுக்கு 14 வயதும் இளைய மகளுக்கு நான்கு மாதமும் மற்ற குழந்தைகளுக்கு முறையே 12/ 10 மற்றும் எட்டு வயதாகிறது.

இந்த சம்பவம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகரிலிருந்து சுமார் 81 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனந்த்பூர் சாஹிப் என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது.

'ஆண் குழந்தை பிறக்காததை மையமாக கொண்ட குடும்ப வன்முறைகள் நடப்பது பஞ்சாப்பில் அரிதான ஒன்றல்ல என்று கூறுகிறார் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி குர்ஜித் சிங். 'இந்த சம்பவம் மிகவும் மோசமானது. தங்களது தாயை இழந்த அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் எங்களை அப்பாவித்தனமாக பார்த்தன. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது' என்று அவர் மேலும் கூறினார்.

பஞ்சாப்பை பொறுத்தவரை கடந்த பல தசாப்தங்களாக பெண் குழந்தைகள் இருப்பதை கண்டறிந்தவுடன் அந்த கருவை கலைக்கும் போக்கு சாதாரணமான ஒன்றாக இருந்து வருகிறது.

இருந்தபோதிலும் கடந்த சில ஆண்டுகளில் இந்த போக்கிற்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதன் காரணமாக கருக்கலைப்பு சம்பவங்கள் குறைந்து வருகின்றன. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பார்க்கும்போதுஇ\ பஞ்சாபில் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் என்ற அளவில் விகிதாச்சாரம் உள்ளது. இது தேசிய அளவிலான விகிதாசாரத்தைவிட 45 குறைவாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 43 வயதாகும் ராகேஷ் குமார் தங்களுக்கு ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக தனது மனைவி அனிதா ராணியை (35) கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவியை கொன்ற பிறகு கழுத்தை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த ராகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பஞ்சாபில் ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த விரக்தியில் மனைவியை கொன்ற கணவன் Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 20, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.