Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட கினியம, வெல்லவ பகுதிகளுக்கு மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உதவி!


(மாவனல்லை  நிருபர்)

குருநாகல் மாவட்டத்தில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட கினியம மற்றும் வெல்லவ பகுதிகளுக்கு  மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினர் விஜயம் செய்தனர். இதன்போது, இனவாத தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கினியம பிரதேசத்துக்கான நிவாரண பொருட்களை கினியம தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் எம்.எச்.சதகதுல்லாஹ்விடம் மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் எம்.கே.எம.மிக்ஷாட் வழங்கி வைத்தார். 

அத்துடன், வெல்லவ பகுதிக்கான ஒரு தொகை நிவாரணப் பொதிகள் வெல்லவ ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் அல்-ஹாஜ் பௌசானிடம் ஒப்படைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. 

இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட கினியம, வெல்லவ பகுதிகளுக்கு மாவனல்லை, மஹவத்த இளைஞர் நலன்புரி அமைப்பினால் உதவி! Reviewed by www.lankanvoice.lk on மே 28, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.