Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொடகே தேசிய ஆக்கஇலக்கியக் கையெழுத்துப்பிரதிகளுக்கான போட்டி-2019




கொடகே நிறுவனம் நாடாத்தும் தமிழ் ஆக்க இலக்கியக் கையெழுத்துப் பிரதிகள் போட்டிக்கெனப் பிரசுரிக்கப்படாத நாவல்.சிறுகதைத்தொகுப்பு, கவிதைத் தொகுப்புக்கான  கையெழுத்துப் பிரதிகள் கோரப்படுகின்றன.


நாவல்

போட்டிக்கு அனுப்பப்படும் நாவலுக்கான கையெழுத்துப் பிரதி160 பக்கங்களுக்குக் குறையாமலும்,300 பக்கங்களுக்கு அதிகரிக்காமலும் இருத்தல் வேண்டும்.


சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்  தொகுப்புக்கான கையெழுத்துப் பிரதி 10சிறுகதைகளுக்குக் குறையாமலும்,15 கதைகளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்80பக்கத்துக்குக் குறையாமலும் 240பக்கங்களுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.


கவிதைத்தொகுப்பு

கவிதைத் தொகுப்புக்கு அனுப்படும் கையெழுத்துப் பிரதி50கவிதைகளுக்குக் குறையாமலும்,75 கவிதைகளுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.56பக்கத்துக்குக் குறையாமலும் 160பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.


சிறந்தப் பிரதியாக  தெரிவு செய்யப்படும் ஒவ்வொன்றுக்கும்(நாவல்சிறுகதைகவிதை)

பரிசில்கள் வழங்கப்படும்.

எல்லாப்பிரதிகளும்1-8 (A5)அளவில் இருத்தல் வேண்டும்பிரதி 12 Point Baamini Font யில்கணனியில் தட்டெழுத்து செய்யப்பட்டு அனுப்பப்படல்வேண்டும்.

                மேற்படி போட்டிகளுக்கு அனுப்பப்படும் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளடங்கும் எந்தவொரு ஆக்கமும் ஏலேவே எந்தவொரு நூலிலும்  வழியிலும் பிரசுரமாகாத ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.


எந்தவொரு பிரதியின் உள்ளடக்கம் இலங்கை தேசியச் சமூகக் கலாச்சாரத்தைப் பாதிக்காத வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.


கணனி தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்படும் பிரதியின் எந்தவொரு இடத்திலும் படைப்பாளியின் எந்தவொரு விபரங்களும் இடம்  பெறலாகாது.

 

பிரதியைப் பற்றிய சுருக்கக் குறிப்பும், படைப்பாளியைப் பற்றிய சுயவிபர விண்ணப்பமும் பிரத்தியேகமாகப்  பிரதியுடன் இணைத்து  அனுப்பப்படல் வேண்டும். போட்டிக்கு     ஒரு  பிரதி    மட்டுமே     அனுப்பினால்   போதுமானது..   இப்போட்டிக்கான நடுவர்  தீர்மானமே  இறுதியானது.கையெழுத்துப்    பிரதிகள்எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந் திகதிக்குள்கீழ்க்காணும் விலாசத்திற்குத் தபால்  மூலமாகவோ,நேரடியாகவோ  கையளிக்கப்படல் வேண்டும்.

 

எஸ்கொடகே சகோதரர்கள் பிரைவேட்லிமிடெட்661, 665, 675,மருதானை வீதிகொழும்பு-10.

 

மேலதிக  விபரங்களுக்கு-  0778681464- 

கொடகே தேசிய ஆக்கஇலக்கியக் கையெழுத்துப்பிரதிகளுக்கான போட்டி-2019 Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 09, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.