காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக புதிதாக கடமையேற்ற ஹக்கீம் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாடில் காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளராக புதிதாக கடமையேற்ற ஏ ஜீ எம் ஹக்கீம் SLEAS அவர்களை வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (9.7.2109செவ்வாய்) காத்தான்குடி பிரதேச கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வின் போது காத்தான்குடி பிரதேசத்தின் கல்வி நிலைதொடர்பாகவும், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் போரத்தினால் பிதேச கல்வி பணிமனைக்கு
எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
மேற்படி நிகழ்வில் ஓய்வு பெற்ற முன்னாள் பிரதேச கல்விப்பணிப்பாளர் எம் ஏ சி எம் பதுர்தீன் அவர்களும் கலந்து கொண்டார்.
காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக புதிதாக கடமையேற்ற ஹக்கீம் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 09, 2019
Rating:
கருத்துகள் இல்லை: