உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பு
(பாரிஸ் அமானுல்லாஹ்)
காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இன் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மேற்படி பாடசாலை மாணவர்கள் குழாம் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும்
இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களை கௌரவித்து வரவேற்கின்ற நிகழ்வு இன்று (17.07.2019 புதன்கிழமை) கல்லூரியில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
கல்லூரியின் அதிபர் S.H.M.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் MMS. உமர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்ட துடன் காத்தான்குடி (தற்காலிக) கோட்டக் கல்விப் பணிப்பாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட A.G.M. ஹக்கீம் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.A.C.M.பதுர்தீன், வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்லூர உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொணடு சிறப்பித்தனர்.
உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 18, 2019
Rating:
கருத்துகள் இல்லை: