மாத்தளை ஸாஹிரா தேசியபாடசாலையின் 52 ஆவது இல்ல விளையாட்டுப்போட்டி பிரதம அதிதியாக சிப்லி பாறூக் பங்கேற்பு.
மாத்தளை சாஹிரா தேசியப்பாடசாலையின் 52 ஆவது இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலை மைதானத்தில்
(15.02.2020 வெள்ளி)
இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின்
முன்னாள் உறுப்பினரும் மாத்தளை ஸாஹிரா கல்லூரியின் பளைய மாணவருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மேற்படி நிகழ்வு கல்லூரியின் அதிபர் N.M. சித்தீக் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலையின் இல்லங்களாக ஜின்னா இல்லம், ஜாயா இல்லம், இக்பால் இல்லம், அசாட் இல்லங்கள் பங்கு பற்றியிருந்தன.
நிகழ்வுகள் யாவும் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்ததுடன் இந்தப்போட்டியில் 247 புள்ளிகளைப்பெற்று ஜாயா இல்லம் 2020 இற்கான சம்பியனாக வெற்றிபெற்றதுடன் 245 புள்ளிகளைப்பெற்று இக்பால் இல்லம் இரண்டாம் இடத்தையும் தட்டிக் கொண்டனர்.
இன்னிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட சிப்லி பாறூக் அவர்களுக்கு 52 ஆவது இல்ல விளையாட்டுப் போட்டி சார்பான நினைவுச்சின்னம் ஒன்றும் கல்லூரி அதிபரால் வழங்கிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இன்னிகழ்வில் கௌரவ அதிதியாக M.C. சாகிர் அஹமட், விசேட அதிதியாக மசாக்கீன் M. முயீன், கல்விப் பணிமனை சார்பாக
M.R.U.றில்வான் உட்பட ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஸாஹிராவின் பழைய அதிபர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பாடசால நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாத்தளை ஸாஹிரா தேசியபாடசாலையின் 52 ஆவது இல்ல விளையாட்டுப்போட்டி பிரதம அதிதியாக சிப்லி பாறூக் பங்கேற்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 16, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 16, 2020
Rating:












கருத்துகள் இல்லை: