வெனிசுலா பிரச்சினையை விளங்கிக் கொள்ளல்.
(U.L.M.N.முபீன்)
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ நிகுலஸ் மற்றும் அவரது மனைவி அமெரிக்காவின் டெல்டா படை பிரிவினால் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது அமெரிக்க மன் ஹர்டன் நீதிமன்றத்தில் வெனிசுலா ஜனாதிபதி ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்கா பிராந்தியத்தில் கொம்யூனிச, சோசியலிச சித்தாந்த ஆட்சி நிலவும் நாடுகளில் வெனிசுலாவும் ஒன்றாகும்.
உலகப் பெட்ரோலிய உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கும் முதன்மையான நாடகவும் வெனிசுலா திகழ்கிறது.
மொத்த உலக எண்ணெய் வள உற்பத்தியில் 20 வீத பங்களிப்பை வெனிசுலா வழங்குகிறது.
1998க்கு முன்பு வெனிசுலாவின் எண்ணை வளமும் மற்றும் இயற்கை வளங்களும் அமெரிக்க கம்பெனிகளில் ஆதிக்கத்தில் இருந்தன.
அப்போதைய ஆட்சியும் அமெரிக்காவுக்கு சார்பான ஆட்சியாக இருந்தது.
1998 இல் இராணுவப் புரட்சியின் மூலம் பின்னாளில் முக்கிய கம்யூனிஸிய தலைவராக கௌரவிக்கப்படுகின்ற ஹுபெச்சோ அல்லது சாவோஸ் என்பவரால் ராணுவப் புரட்சியின் மூலம் வெளிசூலா ஆட்சி கைப்பற்றப்பட்டு பின்னர் நாடு கம்யூனிஸிய ஆட்சி நாடாக மாறியது.
1998 இல் ஆட்சியை கைப்பற்றிய சாவோர்ஸ் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணை வளங்களையும் மற்றும் ஏனைய இயற்கை வளங்களையும் அரசுடைமையாக்கி தேசிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
அது முதல் அமெரிக்காவுக்கும்
வெனிசூலாவுக்குமான பகை தொடங்கியது
சாவோ சுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் சதி முயற்சிகளையும் அமெரிக்கா செய்த போதும் இறுதியில் 2013ல் புற்றுநோயால் சாவோஸ் இறந்தார்.
ஜனாதிபதி சாவோஷுக்கு. புற்று நோய் ஏற்பட அமெரிக்க உளவுப் பிரிவினரே காரணமாக இருந்தனர் என்ற கருத்தும் அப்போதும் முன் வைக்கப்பட்டது.
ஜனாதிபதி சாவோசின் மரணத்தை தொடர்ந்து அவரின் நம்பிக்கைக்குரிய தற்போதைய ஜனாதிபதி மதுரோ நிக்குலஸ் ஜனாதிபதியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் பொருளாதார கொள்கைகளை அவ்வாறே எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்படுத்தினார்.
வெனிசுலாவின் எண்ணை வளத்திலும் இயற்கை வளத்திலும் கண்ணை வைத்திருந்த அமெரிக்காவுக்கு புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மிகப் பெரும் தலையிடியாக இருந்தன.
ஜனாதிபதி மதுரோ உடன் பல்வேறு பேச்சு வார்த்தைகளை அமெரிக்கா நடத்தியபோதும் அமெரிக்காவின் எந்த கோரிக்கையும் வெனிசுலா ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனிடையே உலகத்தின் பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உலக பொருளாதார வல்லரசாகவும் தான் திகழ வேண்டும் என்பதற்காக அமெரிக்கா உலகத்தின் முக்கிய நாணயமாக தனது டொலரை மாற்றுவதற்கான முயற்சியை மிகத் திட்டமிட்டு அடிப்படையில் நீண்ட காலமாக செய்து வந்தது.
அதன் முதல் கட்டமாக 1974 ஆம் ஆண்டு
அமெரிக்கா சவூதி அரேபியாவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தது உலகத்தின் மற்றுமொரு பெட்ரோலிய உற்பத்தியின் முக்கிய நாடான சவுதி அரேபியா தனது பெற்றாலிய விற்பனையின் போது அதற்குரிய நாணய அலகாக டொலரையே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உடன்பாட்டுக்கு வந்து முக்கிய வியாபாரத்தின் நாணய அலகாக தனது டொலரை மாற்றிக் கொண்டது.
அத்தோடு ஏனைய உலக நாடுகளுக்கும் சர்வதேச வியாபாரத்தின் முக்கிய மாற்றீடு நாணய அலகாக டொலரையே பாவிக்க வேண்டும் என அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கும் அழுத்தம் பிரயோகித்தது.
இதன் மூலம் அமெரிக்கா தனது டொலருக்கான கிராக்கியை சர்வதேச அளவில் அதிகரிக்க செய்வதன் ஊடாக நிறைய டாலர்களை அச்சிட்டு சர்வதேச பணச் சந்தையில் விநியோகித்தது. இதன் மூலம் தனது வருமானத்தை உயர்த்தி உலகத்தின் முன்னணி பொருளாதார வல்லரசு நாடாக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தது.
உலக பண சந்தையில் நாணயங்களை வெளியிடும் நணயக் கொள்கைக்கு மாற்றமாக தங்க ஒதுக்கீட்டை வைக்காமல் வெறுமனே டாலர் தாள் நாணயங்களை அச்சிட்டு அமெரிக்கா ஏனைய நாடுகளை ஏமாற்றுகின்றது என்ற ஒரு விமர்சனமும் அப்போதும் முன்வைக்கப்பட்டது.
உலகத்தின் அவ்வப்போது டொலருக்கு எதிரான நாணயங்களை பொதுப்பண அலகாக பயன்படுத்த வேண்டும் என பிரச்சாரம் செய்து வந்த அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த பல நாட்டுத் தலைவர்களை திட்டமிட்ட அடிப்படையில் அமெரிக்கா கொன்று ஒழித்தது. உதாரணமாக சதாம் உசேன் கேணல் கடாபி போன்றவர்கள்
2013 பின் வெனிசுலாவில் ஆட்சியை பொறுப்பேற்ற தற்போது கடத்தப்பட்ட ஜனாதிபதியான மதுரோ தனது பெற்றோலிய உற்பத்தியை விற்பனை செய்கின்ற போது டொலரைப் பெற்றுக் கொள்ளாமல் ஏனைய நாடுகளின் நாணயங்களை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தார் இது அமெரிக்காவுக்கு பேரிடியாக அமைந்தது.
சீனாவுக்கு சீனாவின் யுவானிலும் ரஷ்யாவுக்கு ரஷ்யாவின் ரூபினிலும் பெட்ரோலை விற்பனை செய்து டொலருக்கு மாற்றீடாக அந்தந்த நாடுகளின் பண அலகை பெற்றுக்கொண்டார்.
அமெரிக்கா வெனிசுலாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வெனிசுலாவை முடக்கியது. வெனிசுலாவின் பெட்ரோல் உற்பத்தியை விற்பனை செய்யாத தடுப்பதன் மூலம் அதனை அடிபணியே வைக்க முயன்றது.
ஆனால் அமெரிக்காவின் பெட்ரோலை விட வெனிசுலாவின் பெட்ரோல் ஒரு தரமான நிர்ணயத்தைக் கொண்டது.
அதேவேளை வெனிசுலா தனது பெட்ரோல் உற்பத்தியை மாற்று வழிகளை பயன்படுத்தி ரஷ்யா சீனா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்து வந்தது இதனையும் பல்வேறு தடைகளுக்குள்ளாக அமெரிக்கா கட்டுப்படுத்தியது
இதேவேளை உலகத்தில் டொலருக்கு எதிரான ஒரு மாற்று நாணயத்தை உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால முயற்சி பிரிக்ஸ் நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டது உலகத்தின் சீனா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், போன்ற முக்கிய நாடுகள் டொலருக்கு மாற்றிடான நாணயத்தை உருவாக்க முயன்ற போது அதனை தடுக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு அழுத்தங்களை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்நாடுகளுக்கு எதிரான மிகப் பெரும் வரிகளை பன்மடங்காக அதிகரித்ததை அண்மையில் நாம் உலகத்தில் காணக் கூடியதாக இருந்தது.
டொலர் உலகப் பொது நாணயம் என்ற அந்தஸ்திலிருந்து தடுக்கப்படுகின்ற போது அது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்ற அச்சமே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதி உச்ச வரிவிதிப்புக்கான பிரதான காரணமாகும்.
இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்வதற்கு வெனிசூலாவும் விண்ணப்பம் செய்திருந்தது இது அமெரிக்காவுக்கு மேலும் சலனத்தை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழ்நிலையில் தான் அமெரிக்கா வெனிசுலா ஜனாதிபதி மதுரோ நிக்லஸை கடத்தி வெனிசுலாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு திட்டமிட்ட அடிப்படையில் வெனிசுலாவில் பல்வேறு முக்கிய தளபதிகள் முக்கியஸ்தர்கள் அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டு ஜனாதிபதியின் கடத்தலின் போது எதிர்ப்புகள் எழாவண்ணம் சேவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உறுதியான அரசாங்கம் வெனிசுலாவில் அவையும் வரை வெனிசுலாவின் பெட்ரோலிய உற்பத்திகள் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற அறிவித்திரையும் தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதில் முக்கிய முரண் நகை வெனிசுலா அரசாங்கம் பெட்ரோலிய உற்பத்தியை செய்தபோது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா ஒரு நாட்டின் எல்லைக்குள் புகுந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து விட்டு தற்பொழுது அந்த நாட்டின் வளங்களை கையகப்படுத்தி விட்டு தன்னை ஒரு நீதியையாளனாக காண்பிக்க முற்படுவது உலகத்தின் மிகப் பெரும் சாபக்கேடாகும்.
ULMN.முபீன்
வெனிசுலா பிரச்சினையை விளங்கிக் கொள்ளல்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 06, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 06, 2026
Rating:

கருத்துகள் இல்லை: