காத்தான்குடியில் மட்டு. மாவட்ட இராணுவத் தளபதிக்கு; வரவேற்பும் துஆ பிரார்த்தனையும்!
(எம்.ரி.எம். யூனுஸ்)
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் (அல்-அக்ஸா) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த, மட்டக்களப்பு கல்லடி 243 இலங்கை காலாற்படை கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஆர்.ஏ.டி.எஸ். ராஜபக்ஷ RSP AUSWC psc அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் இன்று செவ்வாய்க்கிழமை (06) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பள்ளிவாயலின் தலைவருமான எம்.ஐ.எம். ஜவாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வில் கல்லடி இராணுவ முகாமின் கேர்ணல் எச்.பி.ஐ. குமார, குருக்களமடம் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி கேர்ணல் பலகல்ல,
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹாரூன் ரஸாதி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம். சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் ஜமாலி, சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. உவைஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், இராணுவ அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
காத்தான்குடியில் மட்டு. மாவட்ட இராணுவத் தளபதிக்கு; வரவேற்பும் துஆ பிரார்த்தனையும்!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 07, 2026
Rating:
















கருத்துகள் இல்லை: