காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்.
காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் MMM. கலாவுதீன் BA SLPS-I/DDE அவர்கள் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று (03.03.2020 செவ்வாய்) தனது கடமைையினைப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் காத்தான்குடி பிரதேச கல்வி அலுவலகத்தில் தனது கடமையினை ஆரம்பித்தார்.
பாடசாலைகளின் ஆசிரியராக, அதிபராக கடந்த 31 ஆண்டுகளாக இருந்து சிறப்பாக கடமையாற்றிய இன்னாள் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் MMM.கலாவுதீன் BA/DDE அண்மையில் திருகோணமலையில் இடம் பெற்ற காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளருக்கான நேர்முகத் தேர்வில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த அறிவு, ஆற்றல், ஆளுமை மிக்க காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளர்.MMM. கலாவுதீன்.BA/DDE அவர்களின் நியமனத்தையடுத்து முன்னாள் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 03, 2020
Rating:

கருத்துகள் இல்லை: