அனர்த்தத்தில் உயிரிழந்த காத்தான்குடியைச் சேர்ந்தவருக்கு அரசினால் ஒரு மில்லியன் ரூபா நிதி வழங்கி வைப்பு .
எம் எஸ் எம் நூர்தீன்
அனர்த்தத்தில் உயிரிழந்த காத்தான்குடியைச் சேர்ந்தவருக்கு அரசினால் ஒரு மில்லியன் ரூபா நிதி வழங்கி வைப்பு .
மரணம் நடந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. மிகத்துரிதமாக இக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களின் வழிகாட்டலில் மிகத் துரிதமாக இக் கொடுப்பனவுக்காக வேலைகள் குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்களான நஜ்மி மற்றும் ரிப்கா கணக்காளர் பகுதி மேற்கொண்டதன் பயனாக இக் கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டது.
இந்த காசோலை வழங்கும் நிகழ்வு காத்தாஙன்குடி பிரதேச செயலத்நில் இடம் பெற்றது
பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் காசோலையை வழங்கி வைத்தார்.
இதில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஜரூப் அபிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரிப்கா குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட யாராக இருந்தாலும் எந்தவொரு வேறுபாடும் இன்றி அரச நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதில் அரச உத்தியோகத்தர்கள் மிக துரிதமாக செயற்படுகின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
அனர்த்தத்தில் உயிரிழந்த காத்தான்குடியைச் சேர்ந்தவருக்கு அரசினால் ஒரு மில்லியன் ரூபா நிதி வழங்கி வைப்பு .
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 23, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 23, 2025
Rating:

கருத்துகள் இல்லை: