தேர்தல் சின்னத்தின் தீர்மானம் விசேட UNP செயற்குழு கூட்டம் இன்று
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணி அடுத்த பொது தேர்தலில் போட்டியிடும் தேர்தல் சின்னம் குறித்து தீர்மானம் எடுக்க UNP செயற்குழுவின் விசேட கூட்டம் இன்று (01) இரவு நடைபெறவுள்ளது.
UNP தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இன்று இரவு 8.00 மணிக்கு சிறிகொத்த கட்சி தலைமை காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
UNP பாராளுமன்ற குழுவின் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே தொலைபேசி சின்னத்திற்கு ஆதரவளித்துள்ளதுடன், செயற்குழுவில் பெரும்பானமையானவர்கள் விருப்பமாக இருப்பது யானை சின்னம் அவ்வாறு இல்லை எனின் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் தெரிவிப்பு.Lnw

கருத்துகள் இல்லை: