33 பாடசாலைகளின் அதிபர்களுக்கு விநியோகிப்பதற்காக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவப் பொதிகள் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளரிடம் கையளிப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற மட்டக்களப்பு மஞ்சந் தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் 33 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களுக்கு விநியோகிப் பதற்காக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவப் பொதிகள் வழங்கும் நிகழ்வு (13 புதன்கிழமை)மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையில் இடம்பெற்றது.
மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவ பொதி வழங்கும் நிகழ்ச்சித் திட்ட வைத்தியர் டாக்டர் தேவதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் 33 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களுக்கு விநியோகிப் பதற்காக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவ பொதி வழங்கும் நிகழ்ச்சித் திட்ட வைத்தியர் டாக்டர் தேவதாவினால் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு வழங்கி வைக்கப்பட்ட குறித்த மருத்துவ பொதியில் 100 பக்கட் காணப்படுவதோடு ஒரு பக்கட்டை ஒருவர் 1 ஒரு கிழமைக்கு பாவிக்கமுடியும் எனவும் இதை பாவிப்பதன் மூலம் படிப்படியாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தெரிவித்தார்.
33 பாடசாலைகளின் அதிபர்களுக்கு விநியோகிப்பதற்காக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவப் பொதிகள் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளரிடம் கையளிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மே 14, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 14, 2020
Rating:


கருத்துகள் இல்லை: