காத்தான்குடியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் டெங்கு பரிசோதனை - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
(ஊடகவியலாளர்
B.M. பயாஸ் )
கடந்த சில நாட்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக நீர்தேங்கி நிற்கும் பகுதிகளில் டெங்கு அபாயம் காணப்படுவதை அடுத்து பிரதேச சுகாதார வைத்திய அலுவலகத்தினால் டெங்கு பரிசோதனை கடந்த 08.12.2025ம் திகதி ஆரம்பிக்கபட்டது.
காத்தான்குடி 162 மற்றும் காத்தான்குடி 162B பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாவது நாளான இன்று வரை 430 வீடுகள் சோதனை செய்யப்பட்டதாகவும் அதில் 68வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் 4வீடுகளுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிடுகின்றது.
டெங்கு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்கும் முகமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் அதிகாரிகளால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுகளும் நீர் தேங்கி நிற்பதை தடுப்பதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டது.
காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி U.l.நஸீர்தீன் அவர்களின் கண்கானிப்பில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் AMM.பஸீர் தலைமையிலான குழுவினர் இவ்நடவடிக்கையை மேற்கொண்டனர்.
காத்தான்குடியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் டெங்கு பரிசோதனை - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 10, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 10, 2025
Rating:








கருத்துகள் இல்லை: