• Home
  • About Us
  • Contact Us
lankanvoice media

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home politics சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

www.lankanvoice.lk டிசம்பர் 11, 2025 politics

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் நேற்று 2025 டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களைக் குறைத்து, இயற்கையுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேராசிரியர் நிஹால் பெரேரா அவர்கள் விசேட உரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த பிரதமர்:

புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்லும்போது, நாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என்னவென்றால், பல்வேறு தரப்பிலிருந்து பெறப்படும் தரவுகளை ஓரிடத்தில் தொகுப்பதற்குரிய பொறிமுறை இல்லாமையேயாகும்.

அடித்தளத்தில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். 

கிராமிய மட்டத்திலான தகவல்களைச் சரியாக அறிந்திருப்பது அவர்களே. அதனால், பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சரியான தரவுகளைச் சேகரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனப் பிரதமர் தெரிவித்தார்.



இதன்போது கருத்துத் தெரிவித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன:

மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்தளவிற்குப் பிரயோசனமானவை என்பதை ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம். வெள்ள நிலைமையின்போது கடுவெல பிரதேச மக்கள் பங்கேற்புடன் நாம் செயற்பட்ட விதம் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. அதன் போது எமக்கு கொட்டகச் சபை முறைமை மிகவும் பிரயோசனமாக இருந்தது. தரவு சேகரிப்புச் செயற்பாட்டிற்கும் சமூக சக்தி கொட்டகச் சபை போன்றதொரு பொறிமுறையைப் பயன்படுத்த முடியுமானால் மிகவும் பிரயோசனமாக அமையும்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள்:

தரவுகள் தொடர்பான விடயத்தில் அரச நிறுவனங்களுக்கிடையில் முறையான தொடர்பின்மை பிரதான பிரச்சினையாகும். 

நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமையும், தமது எல்லைக்குள் உள்ள கடமைகளைச் செய்வதற்கு மாத்திரம் அதிகாரிகள் செயற்படுவதும் இந்த நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. 

அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் ஒன்றிணைத்த தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனத் தெரிவித்தார்.

தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதன் அவசியம் மற்றும் அது தொடர்பில் பிரதேச மட்ட அதிகாரிகளையும் மக்களையும் அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.

பிரதமரின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு


சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 11, 2025 Rating: 5

Tags :

politics
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

politics

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • தயாசிரி மீது சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஆனந்தா
    பாத்திமா சுமைஹா ஜனாதிபதி நிதியிலிருந்து கள்ள ரசீதுகளைச் சமர்ப்பித்து பணம் பெற்றது தொடர்பான நிதி மோசடி குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்தயாசிரி...
  • KFL-7A- SIDE TROPHY - 2026 உதைப்பந்தாட்ட இறுதிநாள் நிகழ்வு; பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ்
    ‘KFL 7A SIDE TROPHY - 2026’ உதைப்பந்தாட்ட இறுதிநாள் நிகழ்வு; பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார். Kattankudy ...
  • கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மீளாய்வு குறித்த கலந்துரையாடல்; பிர்தௌஸ் நளீமியும் பங்கேற்பு.
    கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்க...
  • இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் 93வது வருடாந்திர அறிவியல் அமர்வு பிரதமரின் முன்னிலையில் நடைபெற்றது
    இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) 93வது வருடாந்திர அறிவியல் அமர்வு, பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரியவின் அனுசரணையில், ஜூன் 26 அன்று கொழும்...

Recent Posts

ஈரான்மீதான தாக்குதலை இடைநிறுத்தியது அமெரிக்கா: பின்னணி என்ன?

அமெரிக்காவின் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், செங்கடல் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு...

Interested

  • கிழக்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தவிசாளரின் பொறுப்புக்கள் ஏராளம் நிறைந்தது....
    கிழக்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்  தவிசாளராக (Chairman)  தோழர் MBM. பிர்தௌஸ் (நளீமி)  பதவியேற்றுள்ளார் . மேற்படி நியம...
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் (UNGA) செப்டம்பர் நியூயார்க் நகரத்தில்.நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருவாராயின். அரைக் கைது செய்ய சட்டத் துறையுடன் தான் “தீவிரமாக ஆலோசித்து” வருவதாக மம்தானி தெரிவித்துள்ளார்.
    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் (UNGA)  செப்டம்பர்  நியூயார்க் நகரத்தில். நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருவாராயின். அ ரைக் க...
  • "நீங்களும் ஒரு தனியார் மருத்துவமனை அல்லது ஆய்வகத்தில் சேவைகளைப் பெறச்சென்றால் பற்றுச்சீட்டை கோரிப் பெறுங்கள்.அதிக பணம் அறவிடப்பட்டால் 1977 என்ற துரித அழைப்பின் ஊடாக முறைப்பாடு செய்யுங்கள்!"
    நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகளால் கடந்த 2026.07.13 அன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 400/- ரூபாவிற்கு...
  • இந்திய தலைநகரில் தீவிரமாகும் போராட்டம்.. டெல்லியில் குவியும் இளைஞர்கள்.. என்னதான் நடக்கிறது..?
    டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி தலைமையில் நீட் வினாத்தாள் கசிவு, கல்வி அமைச்சரின் பொறுப்பில்லா நடத்தை, குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பு போன்ற...
All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.