அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது. - பிரதமர் ஹரிணி
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய, போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பின் இரண்டாவது கட்டத்தின்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் பாடசாலைகளில் சேவை செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அனுகூலமான விசேட வாய்ப்பு ஒன்று கிட்டவுள்ளதாகவும் பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் போது மேலும் விடயங்களைத் தெளிவுபடுத்திய பிரதமர்,
நீதிமன்றச் சட்டச் செயற்பாட்டின் இறுதிக் கட்டளையின்படி, இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: