காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று உடல் நலம் குணமடைந்த 55பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று உடல் நலம் குணமடைந்த 55பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு 10 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காத்தான்குடி தள வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி 55பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் அவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உடல் நலம் குணமடைந்து வழியனுப்பி வைக்கப்படுகின்ற 55பேரும் இராணுவத்தினரின் உதவியுடன் அவர்களுடைய வீடுகளுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று உடல் நலம் குணமடைந்த 55பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
மே 10, 2020
Rating:

கருத்துகள் இல்லை: