பாட நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொண்ட பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானம்
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அடுத வாரத்தில் தீர்மானம் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் ஊடகங் களுக்கு இது குறித்து கருத்து அமைச்சர் பல கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டும் என்றார்.
முதல் கட்டத்தில் கீழ், ஆரம்ப வகுப்பு மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க எதிரபார்க்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் உள்ளுராட்சி மன்றங்களின் உதவிகளை பெற்று சகல பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இதன்பின்னர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையின் பின்னர் அதாவது நான்கு நாட்களுக்குப்பின்னர் ஆசிரியரகள் அதிபர்களை அழைத்து பாடங்களுக்கான நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.sor/nl
பாட நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொண்ட பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானம்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 10, 2020
Rating:

கருத்துகள் இல்லை: