சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு
(ஆதிப் அஹமட்)
இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்காலத்தில் களத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
ஒன்றியத்தின் ஆலோசகர் வைத்தியர் அனுஷ்யந்தனின் பரிந்துரையின் கீழ், குறித்த பாதுகாப்பு அங்கிகளை சமூக சேவையாளர் தாரணி இராஜசிங்கம் இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கு அன்பளிப்பு செய்தார்.
இதில் முதற்கட்டமாக கொழும்பிலுள்ள 7 ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.
சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மே 08, 2020
Rating:

கருத்துகள் இல்லை: