மடுல்சீமையில் மேலதிக வகுப்பு நடத்திய அதிபர் கைது!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்திய மடுல்சீமைப் பகுதியின் தமிழ்ப் பாடசாலை அதிபர் ஒருவரை, மடுல்சீமை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மடுல்சீமைப் பகுதியின் மாதோவ பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே அங்கு சென்ற பொலிசார், வித்தியாலய அதிபரை கைது செய்துள்ளனர்.
மடுல்சீமைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட அவ் அதிபர், விசாரனையின் பின்னர் விடுவிக்கப் பட்டதுடன், அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்வித் திணைக்கள சுற்றறிக்கையை மீறி, வகுப்புக்கள் நடாத்தியமை கருதியே, இவ் அதிபர் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வகுப்புக்கள் நடாத்தப் படுவதாக, பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, மேற்படி வித்தியாலயத்தை சுற்றி வலைத்திருந்தனர்.
எம்.செல்வராஜா பதுளை
மடுல்சீமையில் மேலதிக வகுப்பு நடத்திய அதிபர் கைது!
Reviewed by www.lankanvoice.lk
on
மே 12, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 12, 2020
Rating:

கருத்துகள் இல்லை: